முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / "நிஜத்துல முதலமைச்சரானால்... அதில் நடிக்க மாட்டேன்": நடிகர் விஜய் அரசியல் பேச்சு!

"நிஜத்துல முதலமைச்சரானால்... அதில் நடிக்க மாட்டேன்": நடிகர் விஜய் அரசியல் பேச்சு!

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

  • Last Updated :

சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை. முதலமைச்சரானால் நான் நடிக்க மாட்டேன் என்று நடிகர் விஜய் பேசியுள்ளார்.

நடிகர் விஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கிய இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ். தயாரிப்பாளர் கலாநிதிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இசை வெளியீட்டு விழாவில் பேசிய சன்குழுமத்தின் தலைவர் ரஜினிகாந்துக்கு பிறகு விஜய் தான் எளிமையின் உச்சம் என்று கூறியிருந்தார். இயக்குநர் முருகதாஸ் உட்பட படக்குழுவினர் அனைவரும் விஜயை புகழ்ந்து பேசினர். முருகதாஸ் பேசுகையில் சர்கார் படத்தில் உண்மையான விஜயை பார்ப்பீர்கள் என்று கூறினார்.

இறுதியாக பேசிய விழாவின் நாயகன் நடிகர் விஜய், ``சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை. முதலமைச்சரானால் நான் நடிக்க மாட்டேன்” என்று அதிரடியாகப் பேசினார்.

கலையை வளர்க்க வேண்டும் என்பதற்காக நிதியை அள்ளி வழங்கி வருகிறார் கலாநிதிமாறன். ஏ.ஆர்.ரஹ்மான் எங்களுக்கு கிடைத்தது எங்களுக்கு ஆஸ்கர் கிடைத்தது மாதிரி. ஒருவிரல் புரட்சி பாடல் ஒட்டு மொத்த தமிழக மக்களின் எழுச்சி. யோகி பாபுவின் அசுர வளர்ச்சியை பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. பழ.கருப்பையாவுடன் சேர்ந்து நடித்ததை கௌரவமாக நினைக்கிறேன். வரலட்சுமி நடிப்பது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பின் போது தான் தெரியும். வர்ர லட்சுமிய ஏன் வரக்கூடாது என்று சொல்ல வேண்டும். வரலட்சுமி கீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்துகள். வெற்றிக்காக எவ்வளவு வேண்டுமானால் உழைக்கலாம். வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக ஒரு கூட்டம் உழைத்துக் கொண்டிருக்கிறது. இது எனக்கு மட்டுமல்ல, இயற்கை.

எல்லாம் அரசியலில் நின்று ஜெயித்து சர்கார் அமைப்பாங்க. ஆனால் நாங்க சர்கார் அமைத்துவிட்டு தேர்தலில் நிற்க போகிறாம். ரசிகர்களின் ஆரவாரம் அரங்கில் ஓய்ந்தவுடன் படத்தை வெளியிடுவது பற்றி கூறினேன் என்று கூறினார்.

முதலமைச்சரானால் நீங்கள் மாற்ற வேண்டிய முதல் விஷயம் என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், லஞ்சம், ஊழலை ஒழிப்பேன் என்று கூறினார். லஞ்சம் ஊழல் எல்லாம் ஒழிக்க பாடுபடுவேன்; கற்பனையாக முதலமைச்சர் ஆனால் இப்படி எடுத்துக்கலாம் என்று கூறி மீண்டும் அதை தெளிவுபடுத்தினார்.

top videos

    இதைத்தொடர்ந்து குட்டிக் கதை கூறிய அவர், மேல்மட்டத்திலிருக்கும் அரசியல் தலைவர்கள் சரியாக இருந்தால் தவறுகள் நடக்காது. நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. தர்மம் தான் ஜெயிக்கும். ஆனால் கொஞ்சம் லேட்டா ஜெயிக்கும். ஒரு நெருக்கடி ஏற்படும் போது நல்லவர்கள் பொது வெளிக்கு வருவார்கள் என்று கூறினார்.

    First published:

    Tags: Actor vijay, Actor vijay Speech, Sarkar, Sarkar audio launch