Home /News /entertainment /

ஹீரோவாகும் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் - இரட்டை இயக்குநர்களுடன் பேச்சுவார்த்தை ஆரம்பம்!

ஹீரோவாகும் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் - இரட்டை இயக்குநர்களுடன் பேச்சுவார்த்தை ஆரம்பம்!

சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்

சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்

விளம்பரங்களில் நடித்து வந்து சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் விரைவில் திரையுலகில் நாயகனாக கால்பதிக்க இருக்கிறார்.

சென்னை என்றாலே தி.நகரும் அங்கிருக்கும் சரவணா ஸ்டோரும் அனைவருக்கும் உடனே நினைவில் வரும். முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வரும் சரவணா ஸ்டோர் தி.நகர் மட்டுமின்றி குரோம்பேட்டை, பாடி உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளில் தனது கிளைகளைத் துவங்கியுள்ளது. இதற்காக விளம்பரங்களும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றன.

முன்பெல்லாம் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் நடிகைகள் நடித்து வந்தனர். ஆனால் சமீபகாலமாக இந்த நிறுவனத்தின் விளம்பரங்களில் சரவணா ஸ்டோர்ஸ் குழுமத்தின் தலைவர் சரவணனே நடிக்கத் தொடங்கினார். சரவணனுக்கு ஜோடியாக ஹன்சிகா, தமன்னா உள்ளிட்ட நடிகைகளும் நடித்தனர்.



ஆரம்பத்தில் சரவணன் நடித்த விளம்பரங்களுக்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களும் மீம்ஸ்களும் குவிந்தன. ஆனால் அவர் தனது முடிவிலிருந்து பின் வாங்காமல் தொடர்ந்து நடித்து வந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க விழாவிலும் முன்னணி நடிகர்களுடன் சரவணன் கலந்துகொண்டார். இதன்மூலம் அவருக்கு சினிமா ஆசை இருக்கிறது என்று பேசப்பட்டது.



சமீபத்தில் அவர் நாயகனாக நடிக்க முடிவெடுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் நடிக்கும் புதிய படத்தை ஜேடி - ஜெர்ரி என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்குவது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து பிரபல நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள ஜேடி - ஜெர்ரி, “படம் குறித்த பேச்சு வார்த்தை தற்போது துவங்கியுள்ளது. உறுதியானதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்” என்று கூறியுள்ளனர்.

சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல்வேறு விளம்பர படங்களை இயக்கியுள்ள ஜேடி - ஜெர்ரி கூட்டணி அஜித் நடிப்பில் உல்லாசம் படத்தையும், விசில் படத்தையும் இயக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ பார்க்க: எதிரும் புதிருமாய் வசனங்களால் சீண்டிய தல VS தளபதி!

Published by:Sheik Hanifah
First published:

Tags: Chennai, Cinema, Saravana Stores saravanan

அடுத்த செய்தி