Home /News /entertainment /

சிரஞ்சீவி செய்த உதவியைக் கூறி கண்கலங்கிய நடிகர் சரத்குமார்..!

சிரஞ்சீவி செய்த உதவியைக் கூறி கண்கலங்கிய நடிகர் சரத்குமார்..!

சரத்குமார் | சிரஞ்சீவி

சரத்குமார் | சிரஞ்சீவி

“சிரஞ்சீவியைப் பற்றிப் பேச மேடைகள் கிடைப்பதில்லை. எனக்கு மிகவும் கஷ்டமான காலத்தில் உதவி செய்துள்ளார்” - சரத்குமார்

    தான் கஷ்டப்பட்ட காலத்தில் சிரஞ்சீவி செய்த உதவியை நினைத்து கண் கலங்கினார் நடிகர் சரத்குமார்.

    கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் திரைத்துறை பிரபலங்கள் நேரலை மூலமாக இணையதளங்களுக்கு பேட்டியளித்து வருகிறார்கள். இந்நிலையில் தெலுங்கு ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் நடிகர் சரத்குமாரிடம், சிரஞ்சீவி பற்றி கேள்வி கேட்கப்பட்ட போது அவர் கண்ணீர் விட்டு அழுதார்.

    மேலும் அவர் பேசும் போது, “நான் பண ரீதியில் பிரச்னை இருந்தேன். அப்போது தயாரிப்பாளர் ஒருவர் சிரஞ்சீவியிடம் தேதி வாங்கிக் கொடுங்கள். அவரை வைத்து படம் எடுத்து வரும் லாபத்தை உங்களுக்குத் தருகிறேன். உங்களது பிரச்னையும் தீரும் என்றார். சரி என்று நான் சிரஞ்சீவியை சந்திக்க நேரம் கேட்டேன். அவரும் வரச் சொன்னார்.

    அப்போது அவர் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தார். அவரை அங்கு சென்று பார்த்து தனிப்பட்ட முறையில் பேச வேண்டும் என்றேன். உடனடியாக அன்றைய நாளின் ஷூட்டிங்கை ரத்து செய்துவிட்டு என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவளித்தார். என்ன பிரச்னை என்று கேட்டார். நான் விஷயத்தைச் சொன்னதும். இப்போது இருக்கும் படத்தை முடித்துவிட்டு தேதிகள் தருகிறேன் என்றார்.

    சம்பளம் பற்றி கேட்டபோது (கண்கலங்கிக் கொண்டே) உனக்கே பிரச்னை என்று சொல்கிறாய். எனக்கு எதுவும் வேண்டாம். உன் பிரச்னைகள் தீர்ந்து போகும் என்றார். அப்போது ரொம்பவே நெகிழ்ந்துவிட்டேன். அவரைப் பற்றி பேச மேடைகள் கிடைப்பதில்லை,.இப்போது அவருக்கு நன்றி கூறுகிறேன்” என்று சரத்குமார் கூறியுள்ளார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Sarathkumar

    அடுத்த செய்தி