• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Sara's - புனித பிம்பத்தின் மீது எறியப்பட்ட கல்...!

Sara's - புனித பிம்பத்தின் மீது எறியப்பட்ட கல்...!

சரஸ் படம்

சரஸ் படம்

ஓம் சாந்தி ஓசன்னாவை இயக்கிய ஜுட் ஆண்டனி ஜோசப் சாராஸை இயக்கியுள்ளார். அழுத்தமான காட்சி, ஆரவாரமான வசனம் என்றில்லாமல் இயல்பாக கதையை கொண்டு செல்கிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கடவுள், உழைப்பு, தேசபக்தி போன்று கேள்விக்கு அப்பார்ப்பட்ட பல விஷயங்கள் இங்கு உண்டு. அதில் பிரசவமும், பிள்ளைப்பேறும் முக்கியமானது. திருமணமான நாலாவது மாசமே விசேஷம் உண்டா என்று கேட்கிற உலகில், பிரசவம், பிள்ளைப்பேறு குறித்த புனிதத்தின் மீது கல்லெறிந்திருக்கிறது இந்தப் படம்.

சாரா பள்ளியில் படிக்கும் போதே, நான் குழந்தை பெற்றுக்கொள்ளப்போவதில்லை என்று முடிவெடுக்கிறாள். ஏன்? காரணம் எதுவுமில்லை, பிடிக்கவில்லை, அதனால், வாழ்க்கையில் 'நோ' குழந்தை. ஒரே லட்சியம் இயக்குனராக வேண்டும். அந்த முயற்சியின் நடுவில் வின்சென்டை சந்திக்கிறாள். குழந்தை விஷயத்தில் ஒத்த கருத்து கொண்டவர்கள் என்பதால் திருமணம் நடக்கிறது. சாராவுக்கு முதல்பட வாய்ப்பு வருகையில் குறுக்கே ஒரு பிரச்சனை. அவள் கர்ப்பம். கணவனும், சுற்றமும் குழந்தைப் பெற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறது. சாரா படம் இயக்கினாளா இல்லை குழந்தை பெற்றுக் கொண்டாளா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலே சொன்னதுக்கு மேலும் இல்லை குறைவும் இல்லை, அவ்வளவுதான் கதையே. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை துளியும் ஏற்படுத்தாமல் நகர்கிறது கதை. சாராவாக அன்னா பென். பள்ளி சீருடையில் வருகிறவரை அடுத்த காட்சியில் 25 வயசு பெண்ணாக காட்டும்போது ஏற்றுக் கொள்ள கஷ்டமாகத்தான் இருக்கிறது. தேர்ந்த நடிப்பால் அதனை மறக்கச் செய்கிறார். அவரது சிரிப்பும், கண்களுமே பல பாஷைகள் பேசுகின்றன. கொஞ்ச நாள் ஓய்வு எடுப்போம் என்று வேலையை விட்டு அக்கா வீட்டில் தங்கியிருக்கும் கதாபாத்திரம் சன்னி வைனுக்கு. அவருக்கென்றே அளவெடுத்து தைச்ச சட்டை. வாழ்ந்திருக்கிறார்

சன்னி வெயினின் அம்மாவாக மல்லிகா சுகுமாரன், பிரேமில் வந்து நின்றாலே கண்டிப்பான மாமியார் என்பதை தெரியப்படுத்துகிற ஆகிருதி. "இரண்டு குழந்தைகளை பெத்து வளர்த்து என்ன சாதிச்சீங்க? கடைசி காலத்தில் அவ்வளவு பெரிய வீட்டில் இப்போதும் தனிமைதானே?" என்ற சாராவின் கேள்வி சமூகத்திலிருக்கும் பலருக்கும் பொருந்தும். "பரீட்சைக்கு பல மாசம் ப்ரிப்பேர் பண்றோம். பெற்றோர்களாவதற்கு, ஒரு குழந்தையை வளர்க்கிறதுக்கு என்றைக்காவது நாம ப்ரிப்பேர் செய்திருக்கிறோமா?" டாக்டராக வரும் சித்திக் கேட்கும் போதுதான், நமக்கே 'ஆமாயில்ல..?" என்று தோன்றுகிறது

Also read... Trisha: த்ரிஷாவுக்கு கல்தா - மோகன்லாலின் புதிய படத்தை தொடங்கிய ஜீத்து ஜோசப்!

ஓம் சாந்தி ஓசன்னாவை இயக்கிய ஜுட் ஆண்டனி ஜோசப் சாராஸை இயக்கியுள்ளார். அழுத்தமான காட்சி, ஆரவாரமான வசனம் என்றில்லாமல் இயல்பாக கதையை கொண்டு செல்கிறார். குழந்தை பெற்று வளர்ப்பது மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை நயத்துடன் சொல்கிறது படம். சமூகம் இதை ஏற்றுக் கொள்கிறதோ இல்லையோ, அதற்கான உரையாடலை சாராஸ் தொடங்கி வைத்திருக்கிறது. படத்தின் மைனஸ்? கடைசி பத்து நிமிட மெசேஜுக்காக ஒன்றே முக்கால் மணி நேரம் சாராவின் வாழ்க்கையை பார்க்க வேண்டியிருக்கிறது. போரடிக்கவில்லையென்றாலும் அழுத்தமான இன்னொரு லேயரை படத்தில் வைத்திருக்கலாம்.  சாராஸ் - தாய்மை என்ற புனித பிம்பத்தின் மீது எறியப்பட்ட கல்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: