மாநகரம் திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் சந்தோஷ் சிவன்

மாநகரம் திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் சந்தோஷ் சிவன்

மாநகரம் பட ஸ்டில்

பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான சந்தோஷ் சிவன் ‘மாநகரம்’திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யவுள்ளார்.

  • Share this:
‘மாநகரம்’ படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான இத்திரைப்படத்தில் நடிகர் ஸ்ரீ, சந்தீப் கிஷன், ரெஜினா, சார்லி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து கார்த்தி நடிப்பில் ‘கைதி’ திரைப்படத்தை இயக்கினார் லோகேஷ். இரண்டாவது படமும் வசூலிலும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடிக்கவே மூன்றாவதாக விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. இதனிடையே ‘கைதி’ திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் முதல் படமான ‘மாநகரம்’ திரைப்படமும் இந்தியில் ரீமேக் ஆகிறது. பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இத்திரைப்படத்தை சிபு தமீன்ஸ் தயாரிக்க உள்ளார். இவர் ‘புலி’, ‘இருமுகன்’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களையும், மலையாளத்தில் சில படங்களையும் தயாரித்துள்ளார்.முதலாவதாக ‘மாநகரம்’ இந்தி ரீமேக்கில் விக்ராந்த் மாசே நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கதைப்படி இன்னொரு ஹீரோவுக்கான தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் படப்பிடிப்பை தொடங்கி 50 நாட்களில் ஷூட்டிங்கை முடிக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Published by:Sheik Hanifah
First published: