ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய் சேதுபதியின் பிளாக்பஸ்டர் படத்தின் 2-ம் பாகத்தில் சந்தானம்?

விஜய் சேதுபதியின் பிளாக்பஸ்டர் படத்தின் 2-ம் பாகத்தில் சந்தானம்?

சந்தானம் - விஜய் சேதுபதி

சந்தானம் - விஜய் சேதுபதி

சுமார் மூஞ்சி குமாராக சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிப்பார் எனவும் தெரிகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற விஜய் சேதுபதி படத்தின் இரண்டாம் பாகத்தில் சந்தானம் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

’ஏ 1' மற்றும் 'தில்லுக்கு துட்டு 2' ஆகிய திரைப்படங்களின் வெற்றிக்குப் பிறகு, 'டிக்கிலோனா' மற்றும் 'பாரிஸ் ஜெயராஜ்' உள்ளிட்ட படங்களில் பிஸியாக இருக்கிறார் நடிகர் சந்தானம். அதோடு அறிமுக இயக்குநர் சீனிவாச ராவ் இயக்கும் குடும்ப பொழுதுபோக்கு படத்தின் படப்பிடிப்பையும் அவர் தொடங்கியுள்ளார்.

இப்போது கோலிவுட்டின் பரபரப்பான செய்தி என்னவென்றால், இயக்குநர் கோகுல் இயக்கும் 'கொரோனா குமார்' படத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறாராம் சந்தானம். பிப்ரவரி மாத தொடக்கத்தில் இதன் படபிடிப்பு தொடங்கவிருக்கிறது. விஜய் சேதுபதி, நந்திதா ஸ்வேதா, அஸ்வின், ஸ்வாதி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தின் இரண்டாம் பாகம் தான் ‘கொரோனா குமார்’. 2013-ம் ஆண்டு வெளியான அந்தப் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

சந்தனம் 'கொரோனா குமார்' படத்தில் இணைவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் மூஞ்சி குமாராக சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிப்பார் எனவும் தெரிகிறது. விஜய்யின் 'மாஸ்டர்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சதீஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Santhanam, Actor vijay sethupathi