தெலுங்கு படத்தின் ரீமேக்கில் துப்பறிவாளராக நடிக்கும் சந்தானம்..

சந்தானம்

தெலுங்கில் ஹிட்டான காமெடி த்ரில்லர் படத்தின் தமிழ் ரீமேக்கில் சந்தானம் நடித்து வருகிறார்.

 • Share this:
  தெலுங்கில் 2019 இல் வெளியான படம், ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச அத்ரேயா. திரைக்கதை எழுத்தாளரான நவீன் பொலிஷெட்டி நாயகனாக அறிமுகமான திரைப்படம். ஸ்வரூப் படத்தை இயக்கியிருந்தார். நெல்லூரை சேர்ந்த தனியார் துப்பறிவாளராக நவீன் இதில் நடித்திருந்தார். துக்கடா கேஸ்களை விசாரித்து வரும் அவருக்கு பெரிய கேஸ் எப்படி சிக்குகிறது, அதை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை காமெடி கலந்து சொல்லியிருந்தனர். நவீனின் துள்ளலான நகைச்சுவை நடிப்பே படத்தின் பிரதான பலம். தெலுங்கில் படம் ஹிட்டானதுடன் பல விருதுகளையும் வென்றது.

  இந்தப் படத்தை தமிழில் சந்தானம் நடிப்பில் ரீமேக் செய்து வருகின்றனர். மனோஜ் படத்தை இயக்குகிறார். ஊர்வசி, விஜய் டிவி புகழ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். சத்தமே இல்லாமல் படப்பிடிப்பை தொடங்கி பாதி படத்துக்கு மேல் முடித்துவிட்டனர். விரைவில் படத்தின் பெயரையும், பிற விவரங்களையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.

  Also Read:  ஓடிடியில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் 'திட்டம் இரண்டு' திரைப்படம்..

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: