ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Santhanam: மாஸ்டர் கதாசிரியரின் படத்தில் நடிக்கும் சந்தானம்...!

Santhanam: மாஸ்டர் கதாசிரியரின் படத்தில் நடிக்கும் சந்தானம்...!

சந்தானம்

சந்தானம்

மேயாத மான், ஆடை படங்களை இயக்கிய ரத்ன குமார், மாஸ்டர் படத்தின் கதையிலும் பங்களிப்பு செலுத்தியிருந்தார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

விஜய்யின் மாஸ்டர் படத்தின் கதையை லோகேஷ் கனகராஜுடன் பொன் பார்த்திபன், ரத்னகுமார் ஆகியோர் இணைந்து எழுதினர். இதில் ரத்ன குமார் மேயாத மான், ஆடை படங்களை இயக்கியவர். இவர் அடுத்து சந்தானம் நடிக்கும் படத்தை இயக்குகிறார்.

சந்தானம் நடிப்பில் கடைசியாக பாரிஸ் ஜெயராஜ் படம் வெளியானது. படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. கொரோனா பயத்தில் ரசிகர்கள் திரையரங்கை தவிர்த்ததால் பாரிஸ் ஜெயராஜின் வெற்றி பாதித்தது. எனினும், தயாரித்தவர்கள், திரையிட்டவர்கள் என யாரும் நஷ்டமடையவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சந்தானம் நடிப்பில் சர்வர் சுந்தரம், டிக்கிலோனா ஆகிய படங்கள் வெளிவர தயாராக உள்ளன. இது தவிர, சபாபதி என்ற படத்தையும் முடித்துள்ளார் சந்தானம். விரைவில் இந்தப் படமும் வெளியாக உள்ளது. இந்நிலையில் ரத்ன குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்

Also read... Mahat Raghavendra: மகனுக்கு தமிழில் பெயர் வைத்த நடிகர் மகத் ராகவேந்திரா...!

மேயாத மான், ஆடை படங்களை இயக்கிய ரத்ன குமார், மாஸ்டர் படத்தின் கதையிலும் பங்களிப்பு செலுத்தியிருந்தார். அவர் சொன்ன கதைப் பிடித்துப்போக, உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சந்தானம். தற்போது நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. விரைவில் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Santhanam