அடுத்த ஆண்டு வெளியாகிறது சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்று புத்தகம்

news18
Updated: July 12, 2018, 12:46 PM IST
அடுத்த ஆண்டு வெளியாகிறது சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்று புத்தகம்
சஞ்சய் தத்
news18
Updated: July 12, 2018, 12:46 PM IST
சஞ்சு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதி வெளியிட பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் திட்டமிட்டுள்ளார்.

சஞ்சய்தத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட சஞ்சு என்ற திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மகிழ்ச்சி, துக்கம் கலந்த தனது வாழ்வில் வாசகர்களுக்கு சொல்ல பல சுவாரசியமான தகவல் இருப்பதாகவும், அதை புத்தகமாக எழுத இருப்பதாகவும் சஞ்சய் தத் கூறியுள்ளார். 2019 ஆம் ஆண்டு ஜுலை 29-ஆம் தேதி சஞ்சய்தத்தின் 60-ஆவது பிறந்த நாளில் அந்த புத்தகத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

செல்வ செழிப்பில் பிறந்த சஞ்சய் தத், போதை பொருட்களுக்கு அடிமையாகி, குண்டுவெடிப்பி வழக்கில் கைதாகி, சிறைவாசம் அனுபவித்து, பின்னர் மாஸ் ஹீரோவாக உருவெடுத்தது என பல கட்டங்களை கடந்தவர் சஞ்சய் தத்.

இவரின் புத்தகத்தில் மும்பை குண்டுவெடிப்பு, சக ஹீரோயின்களுடனான தொடர்பு உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் இடம்பெறும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால், இவரின் புத்தகம் தற்போதே எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது.
First published: July 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...