Sanjana Singh: முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட நடிகை சஞ்சனா சிங் - ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

நடிகை சஞ்சனா சிங்

சோஷியல் மீடியாக்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சஞ்சனா சிங், அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்கள் மற்றும் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை ஷேர் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

  • Share this:
தமிழ் திரையுலகில் கடந்த 2009-ம் ஆண்டில் ரேணிகுண்டா திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை சஞ்சனா சிங். 1986-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிறந்த இவர் மகாராஷ்டிராவின் மும்பை நகரில் வளர்ந்தார். மும்பையில் தனது பள்ளிப்படிப்பு மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார்.  இவர் சென்னையில் பிறந்தவர் என்றாலும் இவரது தந்தை ராணுவத்தில் அதிகாரி என்பதால் மும்பையில் வளர்ந்த இவர் பின்னர் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் சென்னைக்கு வந்துள்ளார்.

பன்னீர்செல்வம் இயக்கிய விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட தமிழ் திரைப்படமான ரேணிகுண்டா மூலம் தனது திரை வாழ்க்கையை துவக்கிய நடிகை சஞ்சனா,அந்த திரைப்படத்தில் தனது தங்கையை வளர்க்கவும், அன்றாட வாழ்க்கையை ஒட்டவும் ஒரு பாலியல் தொழிலாளி கேரக்டரில் நடித்திருந்தார். சஞ்சனா சிங்கின் நடிப்பு அனைவரும் பாராட்டும் வகையில் அமைந்திருந்தது. பின்னர் கே.வி.ஆனந்த் இயக்கிய திரைப்படமான கோ-வில் தெலுங்கு பெண்ணாக தோன்றினார்.

இதன் பிறகு யாருக்கு தெரியும், தப்பு தாளங்கள், காதல் பாதை, ரெண்டாவது படம், ரகளபுரம், வெற்றிச்செல்வன், அஞ்சான், விஞ்ஞானி, மீகாமன், இரவும் பகலும், சக்க போடு போடு ராஜா, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், மறுபடியும் ஒரு காதல், வெயிலோடு விளையாடு மற்றும் மயங்கினேன் தயங்கினேன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். கவர்ச்சி வேடங்களிலும் நடித்து தனக்கென்று ஏராளமான ரசிகர்களை ஈர்த்துள்ளார் சஞ்சனா சிங். சன் டிவி-யில் ஒளிபரப்பான கிரமாத்தில் ஒரு நாள் என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நடனம், பயணம், திரைப்படங்களைப் பார்ப்பது உள்ளிட்டவை இவரது பொழுதுபோக்குகள். தற்போது வெளி வரவிருக்கும் பல திரைப்பங்களில் பணியாற்றி உள்ளார். மேலும் பல்வேறு மொழிகளில் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். முதன் முதலில் சினிமாவில் நடிக்க வரும் போது ஒரு நடிகையாக வேண்டும் என்பது மட்டுமே கனவாக வைத்திருந்த இவர், தனது ஹயிட் மற்றும் வெயிட்டிற்கு அதிரடி மற்றும் ஆக்ஷன் கதைகள் சரியாக இருக்கும் என்று நினைக்கிறார். எனவே வருங்காலத்தில் ஆக்ஷன் கலந்த கேரக்டரில் நடித்து சிறந்த ஆக்ஷன் ஹீரோயினாக புகழ் பெற வேண்டும் என்பதே தற்போது இவரது கனவாக இருக்கிறது. 
View this post on Instagram

 

A post shared by Sanjana Singh (@actresssanjana)


சோஷியல் மீடியாக்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சஞ்சனா சிங், அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்கள் மற்றும் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை ஷேர் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கோவிட்-19 தொற்றுக்கு எதிராக முதல் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசியை போட்டு கொண்டுள்ளார்.

Also Read:   ஓ மை காட்... திமிங்கலத்தின் வாயிலா இருக்கேன் - மீனவரின் திக் திக் நிமிடங்கள்

சஞ்சனா சிங். இதை இன்ஸ்டா மூலம் தனது ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி உள்ளார் சஞ்சனா. தான் தடுப்பூசி போட்டு கொள்ளும் வீடியோவை வெளியிட்டு, "நான் எனது முதல் டோஸ் கோவிட்ஷீல்ட் தடுப்பூசியை எடுத்து கொண்டேன். எல்லோரும் சென்று தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள். உங்களையும், உங்கள் குடும்பத்தையும் கவனித்து கொள்ளுங்கள். சவுத் இந்தியன் பிலிம் சேம்பருக்கு நன்றி"என்று பதிவிட்டுள்ளார்.
Published by:Arun
First published: