சானியாவிற்கு ஆண் குழந்தை : ட்விட்டரில் ரசிகர்கள் வாழ்த்து

சானியா மிர்சா - சோயிப் மாலிக் ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது

சானியாவிற்கு ஆண் குழந்தை : ட்விட்டரில் ரசிகர்கள் வாழ்த்து
சானியா மிர்சா- சோயிப் மாலிக்
  • News18
  • Last Updated: October 30, 2018, 12:05 PM IST
  • Share this:
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் இணையருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று அசத்தி இருக்கும் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. இரட்டையர் பிரிவு தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் இடத்தையும் இவர் பிடித்து சாதனை படைத்துள்ளார்.  இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்தார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 23- ம் தேதி தான் கருவுற்றிருப்பதாக சானியா மிர்சா தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார். அதில் 'பேபி மிர்ஸா மாலிக்' என்று பதிவிட்டு தனது ரசிகர்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சானியா மிர்சா- சோயிப் மாலிக் ஜோடிக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. சோயிப் மாலிக் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார்.



சானியா மிர்சா- சோயிப் மாலிக்கிற்கு ட்விட்டரில் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிரபலங்களும் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவை வாயிலாக வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
First published: October 30, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading