• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • எளிமையான முறையில் தனது மனைவிக்கு வளைகாப்பு நடத்திய சாண்டி - கியூட் புகைப்படங்கள்!

எளிமையான முறையில் தனது மனைவிக்கு வளைகாப்பு நடத்திய சாண்டி - கியூட் புகைப்படங்கள்!

மனைவியுடன் சாண்டி மாஸ்டர்

மனைவியுடன் சாண்டி மாஸ்டர்

சாண்டி மாஸ்டர் தனது வீட்டில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை மட்டும் அழைத்து, தனது மனைவிக்கு வளைகாப்பு நடத்தியுள்ளார்.அந்த புகைப்படங்கள் இதோ.

  • Share this:
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மானாட மயிலாடா' நிகழ்ச்சியின் மூலம் நடன கலைஞராக அறிமுகமானவர் சாண்டி. தனது தனித்துவமான நடன திறமையால் எண்ணற்ற ரசிகர்களை கவர்ந்தார் . காஜல் பசுபதி என்பவரை திருமணம் செய்துள்ள இவர், கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து விட்டு கடந்த 2017ம் ஆண்டு சில்வியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதனை தொடந்து கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றது இவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. சாண்டியின் கலகலப்பான பேச்சு ஒட்டு மொத்த மக்களையும் கவர்ந்தது. மேலும் தர்ஷன், முகேன், கவின் உடனான இவரது நட்பு மற்றும் குறும்புத்தனமான செயல்கள் பிக் பாஸ் ரசிகர்களை கவர்ந்தது. இதனால் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 100 நாட்கள் வெற்றிகரமாக பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து, இரண்டாவது இடத்தை பிடித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியின் இறுதியில் சாண்டியின் மனைவி மற்றும் மகள் லாலா வருகை தந்திருந்தனர்.

அப்போது சாண்டி - லாலா இடையேயான உறவு அனைவரையும் ரசிக்கும்படி செய்தது. இதனால் சாண்டி மகள் லாலாவிற்கும் எண்ணற்ற ரசிகர்கள் உருவாகினர். தற்போது சாண்டியின் மனைவி சில்வியா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் நிலையில், இவரது வளைக்காப்பு தற்போது எளிமையாக நடைபெற்றுள்ளது. இந்த வளைகாப்பு புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. தனது வீட்டில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை மட்டும் அழைத்து, தனது மனைவிக்கு வளைகாப்பு நடத்தியுள்ளார்.



அதில் சாண்டி , அவரது மனைவி, மற்றும் மகள் லாலா ஆகியோர் சிவப்பு நிற உடையணிந்துள்ளனர். இந்த அழகான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள சில்வியா, ஒன்பதாவது மாத வளைகாப்பு, என குறிப்பிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தனது தங்கையை மிஸ் பண்ணுவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். சில்வியாவின் தங்கை தற்போது வெளிநாட்டில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.



முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிறந்த நாள் கொண்டாடிய தனது மனைவிக்கு சாண்டி தனது இன்ஸ்டாவில், வாழ்த்து கூறி இருந்தார். அதில், "எனக்காகவே வாழும் ஒரு உயிர், என்னோட வெற்றிக்காகவே உழைக்கும் ஒரு உயிர், உன்னாலே நான் உனக்காகவே நான், அன்பு அறியாத என் வாழ்வில் வந்த வானவில் நீயடி ஐ லவ் யு ஆல்வேஸ் கண்ணம்மா" என்று உருக்கமாக பாசத்துடன் கவிதையை கேப்ஷனாக கொடுத்து தனது மனைவிக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை ஷேர் செய்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: