• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தனது மகனை முதல்முறையாக அறிமுகம் செய்த சாண்டி மாஸ்டர்.. வைரலாகும் கியூட் புகைப்படம்..

தனது மகனை முதல்முறையாக அறிமுகம் செய்த சாண்டி மாஸ்டர்.. வைரலாகும் கியூட் புகைப்படம்..

பிக் பாஸ் சாண்டி

பிக் பாஸ் சாண்டி

சாண்டி மாஸ்டர் தனது மகனின் புகைப்படத்தை முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

  • Share this:
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மானாட மயிலா' நிகழ்ச்சியின் மூலம் நடன கலைஞராக அறிமுகமானவர் சாண்டி. தனது தனித்துவமான நடன திறமையால் எண்ணற்ற ரசிகர்களை கவர்ந்தார் . காஜல் பசுபதி என்பவரை திருமணம் செய்துள்ள இவர், கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து விட்டு கடந்த 2017ம் ஆண்டு சில்வியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதனை தொடந்து கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 நிகழ்சியில் பங்கேற்றது இவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. சாண்டியின் கலகலப்பான பேச்சு ஒட்டு மொத்த மக்களையும் கவர்ந்தது. மேலும் தர்ஷன், முகேன், கவின் உடனான இவரது நட்பு மற்றும் குறும்புத்தனமான செயல்கள் பிக் பாஸ் ரசிகர்களை கவர்ந்தது. இதனால் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 100 நாட்கள் வெற்றிகரமாக பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து, இரண்டாவது இடத்தை பிடித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியின் இறுதியில் சாண்டியின் மனைவி மற்றும் மகள் லாலா வருகை தந்திருந்தனர்.

அப்போது சாண்டி - லாலா இடையேயான உறவு அனைவரையும் ரசிக்கும்படி செய்தது. மேலும் சாண்டி அவரது மனைவி மீதும் அளவுகடந்த பாசம் வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிறந்த நாள் கொண்டாடிய தனது மனைவிக்கு சாண்டி தனது இன்ஸ்டாவில், வாழ்த்து கூறி இருந்தார். அதில், "எனக்காகவே வாழும் ஒரு உயிர், என்னோட வெற்றிக்காகவே உழைக்கும் ஒரு உயிர், உன்னாலே நான் உனக்காகவே நான், அன்பு அறியாத என் வாழ்வில் வந்த வானவில் நீயடி ஐ லவ் யு ஆல்வேஸ் கண்ணம்மா" என்று உருக்கமாக பாசத்துடன் கவிதையை கேப்ஷனாக கொடுத்து தனது மனைவிக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை ஷேர் செய்திருந்தார்.

also read : ’விளையாடி கொலை செய்’.. ஸ்குயிட் கேம் வெப் சீரிஸ் எப்படி இருக்கு ?



 
 

 

 


View this post on Instagram


 

 

 

 

A post shared by SANDY (@iamsandy_off)





 also read : பிக்பாஸ் சீசன் 5ல் பங்கேற்க இருக்கும் பிரபல தொழிலதிபர்.. யார் தெரியுமா?

இதனை தொடர்ந்து சாண்டியின் மனைவி சில்வியா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த நிலையில் அவரது வளைகாப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் எளிமையாக நடைபெற்றது. தனது வீட்டில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை மட்டும் அழைத்து, தனது மனைவிக்கு வளைகாப்பு நடத்தினார் சாண்டி.



 




View this post on Instagram





 

A post shared by SANDY (@iamsandy_off)






இந்தநிலையில் சமீபத்தில் சாண்டி மற்றும் சில்வியா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும், தாய் - சேய் நலமாக இருப்பதாகவும் சாண்டி குறிப்பிருந்தார். தற்போது முதன்முறையாக தனது மகனின் புகைப்படத்தை சாண்டி ஷேர் செய்துள்ளார். அதில் அந்த குழந்தையின் பெயர், ஷான் மைக்கேல் என குறிப்பிட்டு போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். சில புகைப்படங்களில் அந்த குழந்தையுடன் சாண்டி மகளும் இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Shalini C
First published: