• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சாண்டி மகள் லாலாவின் மூன்றாவது பிறந்தநாள் கொண்டாட்டம் - வைரலாகும் புகைப்படங்கள்!

சாண்டி மகள் லாலாவின் மூன்றாவது பிறந்தநாள் கொண்டாட்டம் - வைரலாகும் புகைப்படங்கள்!

சாண்டி மகள் லாலாவின் மூன்றாவது பிறந்தநாள் கொண்டாட்டம்

சாண்டி மகள் லாலாவின் மூன்றாவது பிறந்தநாள் கொண்டாட்டம்

பிறந்தநாள் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஷேர் செய்துள்ள சில்யா, வீட்டின் மாடியிலேயே சிம்பிளாக எந்த கூட்டமும் இல்லாமல் கேக் வெட்டி கொண்டாடியதாக குறிப்பிட்டுள்ளார்.

  • Share this:
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மானாட மயிலாட' நிகழ்ச்சியின் மூலம் நடன கலைஞராக அறிமுகமானவர் சாண்டி, தனது தனித்துவமான நடன திறமையால் எண்ணற்ற ரசிகர்களை கவர்ந்தார் . காஜல் பசுபதி என்பவரை திருமணம் செய்த இவர், கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து விட்டு கடந்த 2017ம் ஆண்டு சில்வியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதனை தொடந்து கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 நிகழ்சியில் பங்கேற்றது இவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. சாண்டியின் கலகலப்பான பேச்சு ஒட்டு மொத்த மக்களையும் கவர்ந்தது. மேலும் தர்ஷன், முகேன், கவின் உடனான இவரது நட்பு மற்றும் குறும்புத்தனமான செயல்கள் பிக் பாஸ் ரசிகர்களை கவர்ந்தது.

இதனால் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 100 நாட்கள் வெற்றிகரமாக பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து, இரண்டாவது இடத்தை பிடித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியின் இறுதியில் சாண்டியின் மனைவி மற்றும் மகள் லாலா வருகை தந்திருந்தனர்.

ALSO READ | மியா கலீஃபாவின் டிக்டாக்கை தடை செய்த பாகிஸ்தான் - வரவேற்பை பெறும் பதிலடி!

அப்போது சாண்டி - லாலா இடையேயான உறவு அனைவரையும் ரசிக்கும்படி செய்தது. இதனால் சாண்டி மகள் லாலாவிற்கும் எண்ணற்ற ரசிகர்கள் உருவாகினர். தற்போது சாண்டியின் மனைவி சில்வியா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் நிலையில், இவரது வளைக்காப்பு கடந்த மாதம் எளிமையாக நடைபெற்றது. இந்த வளைகாப்பு புகைப்படங்களை சில்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.

 

 



 




View this post on Instagram





 

A post shared by Cynthia Vinolin (@cynthia_vinolin)






 

இந்த நிலையில் நேற்று சாண்டி மகள் லாலாவிற்கு 3வது வயது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் யாரையும் அழைக்காமல் மிகவும் எளிமையான முறையில் லாலாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது.

ALSO READ | நடிகை சிம்ரனின் லாக்டவுன் பொழுதுபோக்கு இது தான்!

இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. பிறந்தநாள் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஷேர் செய்துள்ள சில்யா , வீட்டின் மாடியிலேயே சிம்பிளாக எந்த கூட்டமும் இல்லாமல் கேக் வெட்டி கொண்டாடியதாக குறிப்பிட்டுள்ளார்.

 




 

மேலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கூட்டம் கூட்டாமல் எளிமையாக பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார். தனது தங்கையை முதல் குழந்தை என குறிப்பிட்டுள்ள சில்யா, அவரை தற்போது மிஸ் பண்ணுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சில்யா தங்கை தற்போது வெளிநாட்டில் படித்து வரும் நிலையில் லாலாவிற்கு இன்ஸ்டாகிராமில் கியூட்டான வீடியோ ஒன்றை ஷேர் செய்து பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். மேலும் அதில் லாலாவை தனது முதல் மகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: