Home /News /entertainment /

ஹாரர் படத்தில் ஹீரோவாக நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்... வெளியானது ஃபஸ்ட் லுக்..

ஹாரர் படத்தில் ஹீரோவாக நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்... வெளியானது ஃபஸ்ட் லுக்..

சாண்டி மாஸ்டர்

சாண்டி மாஸ்டர்

பிக்பாஸ் பிரபலமான சாண்டி மாஸ்டர் நடிக்கவிருக்கும் ஹாரர் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிவுள்ளது.

    பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்றவர் சாண்டி.இ வரின் முழு பெயர் சந்தோஷ் குமார். செல்லமாக அனைவராலும் சாண்டி மாஸ்டர் என்று அழைக்கப்படுகிறார். 2005 ஆம் ஆண்டு மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் நடன இயக்குனராக பணிபுரிந்து பல ஜோடிகளை வெற்றி வாகை சூட வைத்தார்.

    இதையடுத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு சாண்டி நடன இயக்குனராக பணிபுரிந்து வந்தார். பின்பு 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.

    இப்படி தொடர்ந்து பல இடங்களில் தனது திறமையை நிரூபிக்க துடித்த சாண்டிக்கு ஜாக்பாட் அடித்தது என்று தான் கூற வேண்டும். 2019 ஆம்அண்டு வெளியான காலா திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்று மக்களின் மனதை தனது நகைச்சுவை மூலம் வென்றார்.



    இந்நிலையில் சாண்டி நடிக்கவிருக்கும் 3.33 என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிவுள்ளது. இந்த படத்தை bamboo trees productions தயாரிக்க, நம்பிக்கை சந்தரு இப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் கதாநாயகனாக சாண்டி நடிக்கவுள்ளார். இந்த படம் நிச்சயம் பார்வையாளர்களை சீட்டின் எஜ்ஜில் அமரவைக்கும் படமாக இருக்கும் என படக்குழு அறிவித்துள்ளது.

     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Tamilmalar Natarajan
    First published:

    Tags: Bigg Boss Tamil 3, Cinema, Dance master sandy

    அடுத்த செய்தி