டான்ஸ் மாஸ்டரான சாண்டி கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி உள்ளார்.
பிக்பாஸ் புகழ் சாண்டி தமிழ் சினிமா ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர் ஆவர். திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் சீசன் 3-ல் பங்கேற்ற போட்டியாளர்களுள் சாண்டியும் ஒருவர் ஆவார்.
கலைஞர் டிவி-யில் ஒளிபரப்பப்பட்ட பிரபல நடன நிகழ்ச்சியான மானாட மயிலாட சீசன் 1-ல் சாண்டி டான்ஸ் மாஸ்டராக தனது வாழ்க்கையை துவக்கினார். 1986-ம் ஆண்டு ஜூலை 5 அன்று சென்னையில் பிறந்த சாண்டி சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள செயின்ட் கேப்ரியல்ஸ் பள்ளியில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். பின்னர் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் அமைந்திருக்கும் சர் தியாகரயா கல்லூரியில் பட்டம் பெற்றார். இவரது உண்மையான பெயர் சந்தோஷ் குமார்.
நடன நிகழ்வுகளில் பங்கேற்கும் போது உடனிருந்தோர் இவரை சாண்டி என்று அழைக்க நாளடைவில் சாண்டி மாஸ்டர் என்ற பெயரை பெற்றார். சாண்டி தனது குழந்தை பருவத்திலிருந்தே டான்ஸ் மீது தீரா காதல் கொண்டிருந்தார். எல்லா நேரங்களிலும் பயிற்சியிலேயே ஈடுபட்டபடி இருந்தார், மேலும் தனது பள்ளி மற்றும் கல்லூரி நாட்கள் முழுவதும் பல்வேறு டான்ஸ் போட்டிகளில் பங்கேற்று, டிவி மற்றும் திரைத்துறை போன்ற மிகப்பெரிய துறைகளில் தனது திறமையை வெளிக்காட்ட தேவையான நம்பிக்கையை வளர்த்து கொண்டார்.
ஒரு தமிழ் கத்தோலிக்க குடும்பத்தை சேர்ந்த சாண்டியின் தந்தை எஸ்.அன்புசெல்வம் ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஆவார். இவரது தாய் திலகவதி ஒரு இல்லத்தரசி.பிரியதர்ஷினி என்ற சகோதரி மற்றும் தமிழ்மணி என்ற சகோதரர் இருக்கின்றனர். நடிகை காஜல் பசுபதியை 2009-ல் திருமணம் செய்து கொண்டார் சாண்டி. ஆனால் தம்பதியர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளிலேயே இருவரும் விவாகரத்து பெற்றனர் பின்னர் 2017-ல் தனது நடன வகுப்பில் பயின்ற மாணவியான டோரதி சில்வியாவை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், சில்வியா மீண்டும் கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பிறந்தநாளை கொண்டாடிய தனது மனைவிக்காக இன்ஸ்டாவில் கவிதை மூலம் பிறந்தநாள் வாழ்த்து கூறி காதல் மாணவி மீதான அன்பை வெளிப்படுத்தி உள்ளார். அத்துடன் அந்த போஸ்ட்டில் கர்ப்பமாக இருக்கும் மனைவியின் வயிற்றில் சாண்டியும் அவரது மகளும் முத்தம் கொடுப்பது போன்ற போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
"எனக்காகவே வாழும் ஒரு உயிர், என்னோட வெற்றிக்காகவே உழைக்கும் ஒரு உயிர், உன்னாலே நான் உனக்காகவே நான், அன்பு அறியாத என் வாழ்வில் வந்த வானவில் நீயடி ஐ லவ் யு ஆல்வேஸ் கண்ணம்மா"என்று உருக்கமாக பாசத்துடன் கவிதையை கேப்ஷனாக கொடுத்து அந்த ஃபோட்டோவை ஷேர் செய்துள்ளார் சாண்டி. இந்த ஃபோட்டோ மற்றும் கவிதையை பார்த்த சாண்டி ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கமெண்ட்ஸாக பதிவிட்டுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.