ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சர்ரென வந்த ஆட்டோ.. கூலாக வந்து இறங்கிய ஏ.ஆர்.ரகுமான்.. நாகூர் தர்காவில் கந்தூரி விழா வழிபாடு!

சர்ரென வந்த ஆட்டோ.. கூலாக வந்து இறங்கிய ஏ.ஆர்.ரகுமான்.. நாகூர் தர்காவில் கந்தூரி விழா வழிபாடு!

ரகுமான்

ரகுமான்

உலகப் புகழ் பெற்ற நாகூர் தர்காவில் 466ம் ஆண்டு கந்தூரி விழாவின் சந்தனக்கூடு ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், ஏ.ஆர்.ரகுமான் கலந்துகொண்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Nagapattinam, India

நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் செய்யது சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம், ஒவ்வொரு ஆண்டும் நாகூர் தர்காவில் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, 466-ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த மாதம் 24-ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் நாகை யாஹூசைன் பள்ளி தெரு வாசலில் தொடங்கியது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலத்தை, சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், ஆட்சியர் அருண் தம்புராஜ், மற்றும் மாவட்ட எஸ்பி ஜவஹர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு மலர்களை தூவி வணங்கினர். மேலும், ஸ்தூபி இசையுடன் கோலாட்டம், பறையாட்டம், நையாண்டி மேளம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடைபெற்றன. இந்த நிகழ்வில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஆட்டோவில் வந்து இறங்கிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பலத்த பாதுகாப்புடன் தர்காவுக்கு சென்றார். அங்கு சந்தனம் பூசும் நிகழ்வில் கலந்துகொண்டு பின்னர் அங்கிருந்து கிளம்பினார்.

First published:

Tags: AR Rahman