திருவண்ணாமலை தீபத்தை தரிசித்த நடிகை சஞ்சிதா ஷெட்டி

திருவண்ணாமலை தீபத்தை தரிசித்த நடிகை சஞ்சிதா ஷெட்டி

திருவண்ணாமலை தீபத்தை தரிசித்த நடிகை

திருவண்ணாமலை மலை மீது ஏறி நடிகை சஞ்சிதா ஷெட்டி மகா தீபத்தை தரிசனம் செய்துள்ளார்.

  • Share this:
அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாக கருதப்படுகிறது. இங்கு கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும், பெளர்ணமியும் இணைந்து வரக்கூடிய நன்னாளில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.  இந்தாண்டிற்கான கார்த்திகை தீப திருவிழா நவம்பர் 20-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அண்ணாமலையார் சன்னதி அருகே 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நவம்பர் 29-ஆம் தேதி நடைபெற்றது. அன்று அதிகாலை திருக்கோவில் கருவறையின் முன்பு நான்கு மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து மாலை ஆறு மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.

ஆண்டுதோறும் கார்த்திகை மகா தீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் ஒன்று திரள்வார்கள். இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பரணி தீபம் மற்றும் மகாதீப விழாவில் பக்தர்கள் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
View this post on Instagram

 

A post shared by Sanchita Shetty (@isanchitaa)


இந்நிலையில் நடிகை சஞ்சிதா ஷெட்டி திருவண்ணாமலை மலை மீது ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்துள்ளார். அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் அவர், "திருவண்ணாமலை மலையேறியது உண்மையிலேயே அதிசயம். மலையின் உச்சியை அடைய 1 மணி 40 நிமிடங்களானது. ஆங்காங்கே ஓய்வெடுத்து கீழே இறங்க 2 மணி நேரம் 30 நிமிடங்களானது. தீபம் பாய்ஸ் அய்யப்பனுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.

தில்லாலங்கடி, சூதுகவ்வும், பீட்சா 2 உள்ளிட்ட தமிழ்ப்படங்களிலும், சில கன்னட மொழிப்படங்களிலும் நடிகை சஞ்சிதா நடித்துள்ளார்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Sheik Hanifah
First published: