• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Biggboss 4 Tamil | ரியோவிடம் சனம் வாக்குவாதம்.. வேடிக்கை பார்த்து சிரிக்கும் பாலாஜி, ஷிவானி..

Biggboss 4 Tamil | ரியோவிடம் சனம் வாக்குவாதம்.. வேடிக்கை பார்த்து சிரிக்கும் பாலாஜி, ஷிவானி..

ரியோவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சனம்

ரியோவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சனம்

ரியோவிடம் சனம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைப் பார்த்து பாலாஜி நகைப்பது ப்ரமோவில் இடம்பெற்றுள்ளது.

  • Share this:
பிக் பாஸ் நிகழ்ச்சியானது 50 நாட்களை கடந்து சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், வாரந்தோறும் ஒரு டாஸ்க் கொடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தவாரம் கால் சென்டர் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. அதில் பாதி பேர் முதல் கால் சென்டர் ஊழியர்களாகவும், மீதி இருப்பவர்கள் வாடிக்கையாளராக இருப்பார்கள். வாடிக்கையாளர்களாக இருப்பவர்கள் ஊழியர் ஒருவருக்கு கால் செய்து பேசி அவரை டென்ஷன் செய்து அழைப்பை துண்டிக்க வைக்க வேண்டும்.

அப்படி செய்யவில்லை என்றால் அவர்கள் அடுத்த வார நாமினேஷனுக்கு நேரடியாக செல்வார்கள். பேசி முடித்தபிறகு மீண்டும் போன் செய்து தங்களது ஸ்டார் ரேட்டிங்கையும் கேட்க வேண்டும், இது தான் டாஸ்க். இந்த டாஸ்க் நேற்று தொடங்கிய நிலையில் முதலில் அர்ச்சனா - பாலாஜி மற்றும் சனம் - சம்யுக்தா டாஸ்கை நிறைவு செய்துள்ளனர். இதில் தோல்விடையடைந்த அர்ச்சனா மற்றும் சனம் அடுத்தவார நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர்.





இந்த நிலையில் இன்று வெளியான முதல் ப்ரமோவில், கேப்ரியெல்லாவுக்கு கால் செய்து, சோம் சேகர் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. நேற்று நடைபெற்ற டாஸ்க் விறுவிறுப்பாக மோதலுடன் சென்ற நிலையில், இவர்களோ கூலாக பேசுகின்றனர். இறுதியில் சோம் சேகர் இந்த டாஸ்கில் வெற்றிபெறும் காட்சி வீடியோவில் இருந்தது. இதனை தொடந்து வெளியான இரண்டாவது ப்ரமோவில், சனம் ஷெட்டி கூறிய வார்த்தையால் கோபமடைகிறார் ரியோ.

உங்கள் இருவருக்குள் உள்ள அழகான நட்பு பார்க்க அழகாக உள்ளது என்றுதான் நான் கூறினேன் என ரியோ விளக்கமளிக்கிறார். இந்த வீட்டில் குரூப்பிஸம் உள்ளது என கூறுகிறார் சனம். இப்போ என்ன பண்ணனும் சொல்றீங்க? என ரியோ கேட்டு கொந்தளிக்கிறார். சாப்பிட்டுக்கொண்டே இதைப் பார்க்கும் பாலாஜி மற்றும் ஷிவானி சிரிக்கும் காட்சிகள் இருப்பதால் இன்றும் தரமான சம்பவங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: