Home » News » Entertainment » SAMYUKTHA ELIMINATED FROM BIGG BOSS 4 TAMIL RIZ GHTA

Bigg Boss Tamil 4 : பிக் பாஸிலிருந்து வெளியேறிய சம்யுக்தா... இந்த வார நாமினேஷன் தொடங்கியது

பிக் பாஸ் வீட்டிலிருந்து சம்யுக்தா வெளியேறிய நிலையில், இந்த வாரத்துக்கான நாமினேஷன் தொடங்கியது.

Bigg Boss Tamil 4 : பிக் பாஸிலிருந்து வெளியேறிய சம்யுக்தா... இந்த வார நாமினேஷன் தொடங்கியது
பிக் பாஸ் 4
  • Share this:
பிக் பாஸ் நிகழ்ச்சியானது 55 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கும் நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற பிரச்னைகள் குறித்து வழக்கம்போல வார இறுதியில் கமல்ஹாசன் விவாதித்தார். சனிக்கிழமை நிஷா நாமினேஷன் ட்ராபி கார்டை விட்டுக் கொடுத்தது குறித்து பேசுகையில், ரியோ வெற்றிபெறவேண்டும் என நினைத்து விளையாடாமல் நீங்கள் வெற்றிபெறும் முனைப்புடன் விளையாட வேண்டும் என அழுத்தமாகக் கூறினார்.

அதேபோல எப்போதும் குரூப்பிசம் இருப்பதாகப் பேசும் பாலாஜியும் ஒரு குரூப்பில் இருப்பதை நினைவுபடுத்தினார். இதனைத் தொடர்ந்து, நேற்று கமல் வந்ததுமே சம்யுக்தா சொன்ன ‘கலீஜ்’ என்கிற வார்த்தையைப் பற்றி கேட்டார். பின்னர், சம்யுக்தாவிடம் வளர்ப்பு பற்றி ஏன் பேசனீங்க, அந்த வார்த்தை உங்களை மட்டும் இன்றி போட்டியாளர்களின் பெற்றோர்கள் மன நிலையையும் பாதிக்கும் எனச் சுட்டிக்காட்டினார். அதற்கு சம்யுக்தா என் தாய்மையைப் பற்றி ஆரி பேசியது என் மனதைக் காயத்தைப்படுத்தியது எனக் கூறிய நிலையில், ஆரி உங்கள் தாய்மை குறித்து தவறாகப் பேசியதாக தோன்றவில்லை எனக் கூறி, அதற்கான குறும்படத்தையும் போட்டுக் காட்டினார்.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து இதுதான் முதல் குறும்படம் என்பதால் அனைவரிடமும் ஒரு எதிர்பார்ப்பு நிலவியது. அந்தப் படத்தில், சின்ன வயசா இருக்கிற ஆஜித்திற்கு அத்தனை மெச்சூரிட்டி தேவைப்படும் என்று நினைக்கும் நீங்கள், ஒரு குழந்தைக்குத் தாயாகி அவர்களின் மெச்சூரிட்டி அளவில் அப்படி இருக்கும்போது, ஒரு கடமையைச் செய்யத் தவறிய ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டிய பிறகும் என்னை கிளர்ச்சிக்காக பேசுவதாக ஒரு குற்றச்சாட்டை வைத்தார் என்று கூறினார் ஆரி.


Also read: டெல்லியில் வேளாண் சட்டத்திற்கு எதிராக தீவிரமடையும் போராட்டம் - புகைப்படங்கள்

அதன் பின்னர் என் தாய்மை குறித்து கேள்வி எழுப்ப அவன் யார் என சம்யுக்தா அழுதுகொண்டே அர்ச்சனாவிடம் பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனைப் பார்த்த சம்யுக்தா, ஆரியிடம் பேசி சமாதானமாகிவிட்டார். ரமேஷ், நிஷா, சம்யுக்தா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில், நிஷாவும் ரமேஷும் 4 கோடிக்கும் அதிகமான வாக்குகள் பெற்று காப்பாற்றப்பட்டனர். சம்யுக்தா வெளியேறுவதாக கமல் அறிவித்தார். அதன்படி சம்யுக்தா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.


இந்த நிலையில் 9வது வாரத்திற்கான நாமினேஷன் தொடங்கியிருப்பது இன்று வெளியான முதல் ப்ரமோவில் தெரிகிறது. அதில் முதலில் அர்ச்சனா சனத்தை நாமினேட் செய்கிறார். ஆரி பேசுவது பயமுறுத்தும் வகையில் இருக்கிறது என கூறி ரம்யா அவரை நாமினேட் செய்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து பாலாஜி, ஷிவானி, ரியோ, நிஷா, ஆரி, ரமேஷ் ஆகியோர் ரம்யாவை நாமினேட் செய்கின்றனர். ரம்யா சிரித்துக் கொண்டே பேசி சிலரைக் காயப்படுத்துகிறார் என ரமேஷ் கூறுகிறார். ஷிவானி பாலாஜியின் நிழலில்தான் எப்போதும் இருக்கிறார் எனச் சொல்லி அர்ச்சனா அவரை நாமினேட் செய்திருக்கிறார். மேலும் கேப்ரியல்லா, ஆரி, ஆஜித் ஆகியோரும் ஷிவானியை நாமினேட் செய்துள்ளது காட்டப்பட்டுள்ளது. இதனால் இன்றைய நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இருப்பவர்கள் முழு விவரமும் தெரியவரும்.





உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published: November 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading