Home /News /entertainment /

‘தலைவி’ படத்தில் பிரபல அரசியல்வாதி கேரக்டரில் சமுத்திரக்கனி

‘தலைவி’ படத்தில் பிரபல அரசியல்வாதி கேரக்டரில் சமுத்திரக்கனி

சமுத்திரக்கனி

சமுத்திரக்கனி

‘தலைவி’ படத்தில் நடிக்கும் சமுத்திரக்கனி புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. ‘தலைவி’ என்ற டைட்டிலுடன் உருவாகும் இத்திரைப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்குகிறார். தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தில் கங்கணா ரணாவத் ஜெயலலிதா கேரக்டரிலும், அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 6-ம் தேதி ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை ஜெயலலிதா கேரக்டரில் நடித்திருந்த கங்கனா ரணாவத்தின் புதிய புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு நேற்று மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 33-வது நினைவு தினத்தை முன்னிட்டு எம்.ஜி.ஆராக நடித்திருக்கும் அரவிந்த்சாமியின் புதிய புகைப்படங்களை வெளியிட்டது

இதுகுறித்து நடிகர் அரவிந்த்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் கேரக்டரில் நடித்தது ஒரு மரியாதை மட்டுமல்ல. ஒரு பெரிய பொறுப்பு. என் மீது நம்பிக்கை வைத்ததற்காக இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி” என்று கூறியிருந்தார்.

அதேபோல் இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி தலைவி படத்தில் தனது கதாபாத்திரத்தின் புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டார். அதில், புரட்சித்தலைவர் அவர்களின் நினைவு தினத்தில் அண்ணன் அரவிந்த்சாமி அவர்களுடன் நான் "தலைவி" திரைப்படத்தில்... பேரன்பான இயக்குனர் ஏ.எல்.விஜய் அவர்களுக்கு நன்றி...வெல்வோம்.” என்று எழுதியிருந்தார்.

சமுத்திரக்கனி ‘தலைவி’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு மிக நெருங்கிய நண்பரான ஆர்.எம்.வீரப்பன் கேரக்டரில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. இதற்காக அவர் சிறப்பு பயிற்சிகளை எடுத்து பின்னர் நடித்ததாகவும் கூறப்படுகிறது.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அமைச்சரவைகளில் அமைச்சராக பணியாற்றிய ஆர்.எம்.வீரப்பன், அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதும் 1995-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி ‘எம்.ஜி.ஆர். கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார்



உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்...
Published by:Sheik Hanifah
First published:

Tags: Kollywood, Samuthirakani, Thalaivi

அடுத்த செய்தி