"எனக்கு தெரியும் சார், உங்க வேலைய பாருங்க" - நெகடிவ் கமெண்ட்ஸ்களுக்கு சமீரா ஷெரிப்  பதிலடி!

சமீரா ஷெரிப்

கணவர் சயீத் அனவரும் டீ சர்ட் அணிந்துகொண்டு தங்களுக்கு குழந்தை விரைவில் வர இருப்பதை மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டனர்

  • Share this:
    நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தன்னை விமர்சனம் செய்த நெட்டிசன்களுக்கு சின்னத்திரை நடிகை சமீரா ஷெரிப் பதிலடி கொடுத்துள்ளார்.

    விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் நடித்த சமீரா, அதே நாடகத்தில் நடித்த சையத் அன்வரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்த நிலையில் சமீரா கர்ப்பமாகவும் இருக்கிறார். அவரும், கணவர் சயீத் அனவரும் டீ சர்ட் அணிந்துகொண்டு தங்களுக்கு குழந்தை விரைவில் வர இருப்பதை மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமீரா, இன்ஸ்டாகிராம் மற்றும் யூ டியூப்பில் தொடர்ந்து வீடியோ பதிவேற்றி வருகிறார். அண்மையில் குடும்பத்தினருடன் சென்று கோவிட் வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதையும் வீடியோவாக பதிவு செய்திருந்தார். மேலும், மக்களும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

     



     




    View this post on Instagram





     

    A post shared by Sameera Sherief (@sameerasherief)






    ஆனால், இந்த வீடியோவுக்கு அடுத்தபடியாக சமீரா பதிவேற்றிய வீடியோ கடும் விமர்சனத்துக்குள்ளானது. கர்ப்பமாக இருக்கும் அவர் காஞ்சனா படத்தில் வரும் வீரா பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், கமென்டில் திட்டித் தீர்த்தனர். சிலர் அறிவுரை கூறியிருந்தனர். பொறுத்துப் பார்த்த அவரால் தொடர்ந்து கமெண்டுகள் ஒரே மாதிரி வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    உடனே களத்தில் குதித்த சமீரா, தன்னை விமர்சித்தவர்களுக்கும், அறிவுரை கூறியவர்களுக்கும் பதிலடி கொடுக்கத் தொடங்கினார். அதாவது, கதிர்வீச்சு குழந்தையை பாதிக்கும், மருத்தவரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியவருக்கு, நீங்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம், பயப்படத் தேவையில்லை எனக் கூறினார். நெட்டிசன் ஒருவர் லூசு என்றும், அண்மையில் கொரோனா தடுப்பூசி எடுத்திருப்பதால், கவனமாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.

     



     




    View this post on Instagram





     

    A post shared by Sameera Sherief (@sameerasherief)






    அவர்களுக்கு பதில் கொடுத்துள்ள சமீரா, வேக்சின் எடுத்தால் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அர்த்தமில்லை, நோயில் இருந்து தடுக்கும் ஒரு தடுப்பு மருந்து மட்டுமே வேக்சின். உங்களை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள், இதுவரை நீங்கள் தடுப்பூசி போடவில்லை என்றால், உடனடியாக போட்டுக்கொள்ளுங்கள் எனத் தெரிவித்துள்ளார். குழந்தை குறித்து அக்கறை கொண்டு திட்டிய நெட்டிசன்களுக்கு, என் குழந்தையை இந்த உலகில் இருக்கும் வேறு யாரையும் விட அதிக பாதுகாப்பும், கவனமும் என்னால் மட்டுமே கொடுக்க முடியும், அதைப் பற்றி எனக்கு நன்கு தெரியும், நீங்கள் எனக்கு பாடம் எடுக்க வேண்டாம் எனத் தெரிவித்தார். நெகடிவ் கமெண்டுகளுக்கு தனது பாணியில் பதிலடி கொடுத்த சமீராவின் பதிவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    பகல் நிலவு சீரியல் மட்டுமல்லாது, மிஸ்டர் அன்ட் மிஸ் சின்னத்திரை ரியாலிட்டி ஷோவிலும் இருவரும் கலந்து கொண்டனர். இன்ஸ்டாகிராமில் 6 லட்சம் பின்தொடர்பாளர்களும், யூ டியூப்பில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்களும் சமீராவுக்கு உள்ளனர். அன்றாடம் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் உள்ளிட்டவைகளை Vlog- ஆக பதிவு செய்து யூடியூப்பில் பதிவேற்றி வருகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: