குறைந்தபட்சம் ஒரு நல்ல அளவிலான ஃபிட்னஸுடன் இருப்பதே தற்காலத்தில் நாம் அனைவரும் செய்ய விரும்பும் ஒன்றாக இருக்கிறது. ஆனால் உடலில் இருக்கும் கூடுதல் எடையை குறைப்பது என்பது நிச்சயமாக எளிதான காரியமல்ல. பருமனாக இருப்பவர்கள் தங்களது உடல் எடையை குறைக்கும் பயணத்தில் பிடித்த உணவை வேண்டாம் என்று ஒதுக்குவது, உடற்பயிற்சி மற்றும் கட்டுப்பாட்டில் சீராகவும், ஒழுக்கமாகவும் இருப்பது உள்ளிட்டவற்றை மிகவும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியிருக்கும். உடற்பயிற்சி என்பது வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு விஷயங்களைக் குறித்தாலும், தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பதை எல்லோரும் ஒப்பு கொள்வார்கள்.
பிரபல நடிகையான சமீரா ரெட்டி தனது அதிகப்படியான உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்ட்டிவாக இருக்கும் சமீரா, சமீபத்தில் ஷேர் செய்த போஸ்ட்டில் தான் 9 கிலோ வரை எடையை குறைத்துள்ளதை உறுதிப்படுத்தி உள்ளார். தவிர மேலும் 8 கிலோ வரை உடல் எடையை குறைக்க தனது உடற்பயிற்சி பயணத்தை தொடர்வதாக அந்த போஸ்ட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
2002-ம் ஆண்டு முதல் திரையுலகில் நடிகையாக இருந்து வரும் மும்பையை சேர்ந்த சமீரா ரெட்டி, 2008-ம் ஆண்டு வாரணம் ஆயிரம் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். துவக்கத்தில் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வந்த இவர், பின்னர் தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
View this post on Instagram
இரு குழந்தைகளுக்கு தாயான சமீரா ரெட்டி, பல மாதங்களாக எடை குறைப்பு பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் சமீரா, தனது எடை அதிகரிப்பு, மகப்பேறுக்கு பிந்தைய மனச்சோர்வு, கர்ப்பம் மற்றும் எடையிழப்பு பயணம், சுய காதல் பற்றி தனது ரசிகர்கள், ஃபாலோயர்கள் உள்ளிட்டோரிடம் போஸ்ட்கள் மூலம் ஷேர் செய்து வருகிறார். இந்நிலையில் ஒரே ஃபிரேமில் தனது இரு ஃபோட்டோக்களை ஷேர் செய்துள்ள சமீரா "9 கிலோ குறைத்து விட்டேன், இறுதியாக கடின உழைப்பு பலனளிக்கிறது! 92 கிலோ உடல் எடையில் எனது எடை இழப்பு பயணத்தை துவக்கினேன். தற்போது அதிலிருந்து 9 கிலோ எடை குறைந்து 83 கிலோவில் உள்ளேன். இந்த பயணத்தை நாம் முழுமையாக முடிக்க இன்னும் 8 கிலோவை குறைக்க வேண்டும். எனது இலக்கை அடைவதற்கான ஒரே வழி நிலையான கவனம்"என்று குறிப்பிட்டுள்ளார்.
Also read... அந்தரத்தில் தொங்கியபடி யோகா செய்யும் அஞ்சலி - வைரலாகும் புகைப்படங்கள்!
மேலும் தான் பாக்சிங் செய்ய துவங்கி இருப்பதாகவும், அது மிகவும் வேடிக்கையாக இருப்பதாகவும் சமீரா கூறி உள்ளார். தான் பாக்சிங் செய்யும் வீடியோவை விரைவில் ஷேர் செய்வதாகவும், உங்களுக்காக எதை செய்தாலும் அதை தொடர்ந்து செய்யுங்கள் மிக முக்கியமாக எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள் என்று தனது ஃபாலோயர்களுக்கு கூறி உள்ளார் சமீரா ரெட்டி.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Entertainment, Sameera Reddy