தமிழர் பிரச்சனை குறித்து பேசக்கூடாது - சமந்தா மௌனத்தின் பின்னணி!

சமந்தா

ஜுன் 4 ஆம் தேதி தி பேமிலி மேன் 2 வெளியாகிறது. அன்று தமிழகத்தில் இந்தப் பிரச்சனை மீண்டும் எழுவதற்கு வாய்ப்புள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தி பேமிலி மேன் சீஸன் இரண்டில் தமிழ்ப் போராளிகள் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பது போன்று காட்சிகள் உள்ளன. தமிழ்ப் போராளி போன்று சீருடை அணிந்திருக்கும் சமந்தா, எல்லோரையும் சாகக் கொல்வேன் என்று பேசும் வசனமும் சீஸன் 2 ட்ரெய்லரில் இடம்பெற்றிருந்தது. தமிழர்களையும், தமிழ்ப் போராளிகளையும் தவறாக சித்தரித்திருப்பதாகக் கூறி தி பேமிலி மேன் 2-க்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக அரசு சார்பிலும், மதிமுக தலைவர் வைகோ சார்பிலும், தி பேமிலி மேன் சீஸன் 2-ஐ தடை செய்யும்படி மத்திய அமைச்சரிடம் கடிதம் அளிக்கப்பட்டது.

படத்தின் இயக்குனர்கள் இந்த சர்ச்சைக்கு பதிலளிக்கையில், பல வருடங்கள் தீவிரமாக உழைத்து தி பேமிலி மேன் கதையை எழுதியதாகவும், யாரையும் புண்படுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும், இந்த கதையை எழுதியதில் தமிழ் எழுத்தாளர்களின் பங்களிப்பு இருப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால், தமிழ் அமைப்புகளை இந்த விளக்கம் சமாதானப்படுத்தவில்லை. சீரிஸை வெளியிடக் கூடாது என்பதில் அவை உறுதியாக இருந்தன.

இத்தனை களேபரத்திலும் சர்ச்சைக்குரிய தமிழ்ப் போராளி வேடத்தில் நடித்த சமந்தா வாய் திறக்கவில்லை. நடிகையாக அவரை அறிமுகப்படுத்தியதும், அடையாளம் தந்ததும் தமிழ் சினிமா. அவருக்கு தமிழர்களின் உணர்வுகள் தெரியும். தெரிந்துமா இப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்தார் என தமிழகத்தில் பலரும் கொந்தளித்தனர். ஆனால், இன்றுவரை இந்த சர்ச்சைகளுக்கு சமந்தா பதிலளிக்கவில்லை.

Also read... ஓடிடியில் வெளியாகும் விஷ்ணு, கௌதம் வாசுதேவ மேனனின் எஃப்ஐஆர்!

தமிழர் குறித்த சர்ச்சைக்கு பதிலளித்தால், அது தங்களின் சீரிஸுக்கு எதிர்மறையான விமர்சனங்களை தரும் என்பதால், இந்த விவகாரம் குறித்து எதுவும் பேச வேண்டாம் என அமேசான் சமந்தாவிடம் கேட்டுக் கொண்டதாலேயே அவர் இந்த விஷயத்தில் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது இப்போது தெரிய வந்துள்ளதுஜுன் 4 ஆம் தேதி தி பேமிலி மேன் 2 வெளியாகிறது. அன்று தமிழகத்தில் இந்தப் பிரச்சனை மீண்டும் எழுவதற்கு வாய்ப்புள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: