Home /News /entertainment /

த்ரிஷாவை மகிழ்ச்சியில் ஆழ்த்திய சமந்தாவின் ட்வீட்!

த்ரிஷாவை மகிழ்ச்சியில் ஆழ்த்திய சமந்தாவின் ட்வீட்!

த்ரிஷா மற்றும் சமந்தா

த்ரிஷா மற்றும் சமந்தா

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    த்ரிஷா நடித்து சமீபத்தில் வெளியான 96 படத்தை பார்த்துவிட்டு மகிழ்ச்சியடைந்த சமந்தா த்ரிஷாவை வெகுவாக பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

    பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான படம் 96. கதையாலும் இசையாலும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது இந்தப் படம்.

    பலரும் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிவரும் நிலையில் நடிகை சமந்தாவும் இந்தப் படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



    அதில் நடிகை த்ரிஷாவின் நடிப்பை வெகுவாக பாராட்டிய அவர், “96 படம் பார்த்தேன். என்ன ஓர் அற்புதமான நடிப்பு. த்ரிஷா நீங்கள் இதில் எப்படி நடித்துள்ளீர்கள் என என்னால் எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. மிகவும் வித்தியாசமான கதாபாத்திரமான இதில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளீர்கள்" என்று சமந்தா பதிவிட்டுள்ளார்.



    சமந்தாவின் இந்தப் பதிவு த்ரிஷாவை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. சமந்தாவின் பதிவிற்கு பதிலளித்த த்ரிஷா இந்த பாராட்டை கண்டு தான் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக, படம் குறித்தும் தனது நடிப்பு குறித்து பதிவிட்டதற்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: 96 movie, Samantha, Trisha, Vijay sethupathi

    அடுத்த செய்தி