முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / The Family Man 2: 'தி பேமிலி மேன் சீஸன் 2 விமர்சனம்' - எழுத்தாளர் விநாயக முருகன்

The Family Man 2: 'தி பேமிலி மேன் சீஸன் 2 விமர்சனம்' - எழுத்தாளர் விநாயக முருகன்

இந்த தொடரின் கதை விவாதத்தில் தமிழர்கள்தான் உட்கார்ந்து வசனம், காட்சிகள் எழுதியுள்ளார்கள்.

இந்த தொடரின் கதை விவாதத்தில் தமிழர்கள்தான் உட்கார்ந்து வசனம், காட்சிகள் எழுதியுள்ளார்கள்.

இந்த தொடரின் கதை விவாதத்தில் தமிழர்கள்தான் உட்கார்ந்து வசனம், காட்சிகள் எழுதியுள்ளார்கள்.

 • 1-MIN READ
 • Last Updated :

  தி பேமிலி மேன் சீஸன் 2 நேற்று வெளியானது. ட்ரெய்லரைப் பார்த்து, தமிழர்களுக்கும், தமிழ் போராளிகளுக்கும் களங்கம் கற்பித்திருக்கிறார்கள் என்ற விமர்சனம் எழுந்தது. 'ஷேம் ஆன் சமந்தா' என்ற ஹேஷ்டேகை ட்விட்டரில் ட்ரெண்டாக்கினர்.

  உண்மையில் தி பேமிலிமேன் சீஸன் 2 தமிழர்களுக்கு எதிரானதா? எழுத்தாளர் விநாயக முருகன் சீரிஸைப் பார்த்துவிட்டு எழுதியிருக்கும் விமர்சனம் இது.

  பாட்ஷா திரைப்படத்தில் ரஜினி அமைதியாக சென்னையில் ஆட்டோ ஓட்டுவார். ஒரு பிரச்சினை வந்ததும் அவரது கதாபாத்திரத்தின் டிரான்ஸ்பர்மேஷன் நடக்கும். அதற்குப் பின்னால் பல திரைப்படங்களில் அதுபோன்ற காட்சிகள் இருந்தாலும் இந்த பேமிலி மேன் வெப்தொடரில் வரும் சமந்தா கதாபாத்திரத்தின் டிரான்ஸ்பர்மேஷன் தான் பட்டாஸ். இந்த வெப்சீரிஸ் சமந்தா சினிமா கேரியரில் ஒரு மைல் ஸ்டோன். மொத்த எபிசோடுகளையும் தொடரில் தமிழர்களையோ, போராளிகளையோ தரக்குறைவாக எங்கும் குறிப்பிடவில்லை. சொல்லப்போனால் போராளிகளுக்கு உதவிசெய்கிறேன் என்று தமிழ்நாட்டில் இருந்துக்கொண்டு அவர்களை சுரண்டும் கும்பலைத்தான் பல இடங்களில் காட்டியுள்ளார்கள். குறிப்பாக இந்த ஒன்றிய அரசை கடுமையாக தாக்கி சித்தரித்துள்ளார்கள். பாகிஸ்தான், சீனாவின் உதவியை காட்டி எப்படி ஒன்றிய அரசை இலங்கை பயன்படுத்தியதோ அதுபோல இலங்கையை தனது பிடியில் வைக்க ஒன்றிய அரசு எப்படி கணக்குப்போட்டது என்பதைதான் காட்சிப்படுத்தியுள்ளார்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த தொடரின் கதை விவாதத்தில் தமிழர்கள்தான் உட்கார்ந்து வசனம், காட்சிகள் எழுதியுள்ளார்கள். அதனால் தான் தமிழர்கள் எப்படி வட இந்தியர்களை பார்க்கிறார்கள். அவர்கள் பார்வையில் தமிழ் அதிகாரிகள் எப்படியுள்ளார்கள் என்று உளவுத்துறை அலுவலகத்தில் நடக்கும் அந்த அதிகாரவர்க்க முரண்களை எல்லாம் கவனமாக காட்சிப்படுத்த முடிந்துள்ளது.

  சமந்தாவுக்கு அடுத்து ரசிக்க வைத்த கதாபாத்திரம் தேவதர்ஷினி. பொதுவாக இதுபோன்ற கதைக்களனில் வரும் உளவுத்துறை அதிகாரியின் சொந்த வாழ்க்கை மிகுந்த சிக்கலாக இருக்கும். முதல் சீசனிலேயே அதைக்காட்டிவிட்டார்கள். அதை இரண்டாம் சீசனில் தொடரவேண்டும் என்ற நோக்கில் ப்ரியாமணி வரும் காட்சிகள் எல்லாம் கொஞ்சம் இழுவையாக இருந்ததைவிட வேறு பெரிய குறைகள் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

  விநாயக முருகன் தமிழின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர். இவரது ராஜீவ்காந்தி சாலை நாவல் முக்கியமான படைப்பு. நீர், வலம், சென்னைக்கு மிக அருகில், அமேசான் காடுகளும் சில பேரழகிகளும், மனுஷனுக்கு ஆயிரம் பிரச்சனைகள் ஆகிய புத்தகங்களும் எழுதியுள்ளார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  First published: