ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

படம் வெளியான மூன்று நாட்களிலே வசூல் சாதனை செய்த சமந்தாவின் 'யசோதா'.!

படம் வெளியான மூன்று நாட்களிலே வசூல் சாதனை செய்த சமந்தாவின் 'யசோதா'.!

சமந்தா

சமந்தா

Samantha Ruth Prabhu's Yashoda | நடிகை சமந்தா நடிப்பில் கடந்த 11-ஆம் தேதி திரையரங்கில் வெளியான யசோதா திரைப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சமந்தா நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நாளில் வெளியான யசோதா படமானது அனைத்து மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஹரி - ஹரிஷ் இயக்கத்தில் ஆக்‌ஷன்-த்ரில்லராக உருவாகியுள்ள 'யசோதா' திரைப்படத்தில் மருத்துவ உலகில் நடக்கும் முறைகேடுகளையும், வாடகைத்தாய் என்ற பெயரில் நடக்கும் குற்றங்களையும் உலகிற்கு வெளிச்சம் போட்டு காண்பித்துள்ளனர்.

ஸ்ரீதேவி மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணி சர்மா இசையமையமைத்துள்ளார். மேலும் சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன் என பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  இதில் இடம்பெற்ற சமந்தாவின் ஸ்டண்ட் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

யசோதா படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. உலகம் முழுதும் வெளியான யசோதா திரைப்படம் முதல் மூன்று நாட்களில் இதுவரை 20 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படமானது முதல் நாளில் 6.3 கோடி வரை கலெக்‌ஷன் செய்தது.

Also Read : நடிகை கீர்த்தி ஷெட்டியின் ரசிக்க வைக்கும் போட்டோஸ்

'யசோதா' திரைப்படம் வெளிநாடுகளில் சிறப்பான வசூல் பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Published by:Selvi M
First published:

Tags: Actress Samantha, Entertainment, Tamil News