சரித்திர படத்தில் இளம் நடிகருக்கு ஜோடியாகும் சமந்தா?

சரித்திர படத்தில் இளம் நடிகருக்கு ஜோடியாகும் சமந்தா?

நடிகை சமந்தா

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை குணசேகர் இயக்குகிறார்.

  • Share this:
    சமந்தா நடிக்கும் வரலாற்றுப் படத்தில் அவருக்கு ஜோடியாக இளம் நடிகர் ஒருவர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு, சரித்திர, புராண படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்த வகை படங்கள் சராசரியான வசூலை குவிப்பதும் இதற்கு முக்கியக் காரணம்.

    அந்த வகையில், சகுந்தலை என்ற புராண கதை சினிமா படமாக தயாராகிறது. அந்தப் படத்துக்கு சகுந்தலம் என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை குணசேகர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான ருத்ரமா தேவி படத்தை இயக்கியவர்.

    இதில் டைட்டில் ரோலில் சமந்தா நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக மலையாள இளம் நடிகர், தேவ் மோகன் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. சகுந்தலையாக நடிக்கும் சமந்தாவுக்கு ஜோடியாக துஷ்யந்தன் கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக தெரிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: