மையோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் சமந்தா. உடல் நலனைக் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு வெளியான யசோதா படத்துக்காக, தமிழ், தெலுங்கில் தலா 1 பேட்டி கொடுத்து படத்தின் ப்ரமோஷனை முடித்துக்கொண்டார். இதன் ஒரு பகுதியாக சிகிச்சைக்காக சமீபத்தில் அமெரிக்கா சென்றுவந்தார். மேலும் தனது உடல்நிலை பாதிப்பு குறித்து பதிவிட்ட சமந்தா, ''போராடிக்கொண்டே இருங்கள். நீங்கள் இன்னும் பலமாக தயாராவீர்கள். இன்னும் திடமாக மாறி கஷ்டங்களை எதிர்கொள்வீர்கள்'' என்று குறிப்பிட்டிருந்தார்.
யசோதா படத்துக்கு பிறகு நடிகை சமந்தா நடிப்பில் சாகுந்தலம் என்ற படம் உருவாகியுள்ளது. குணசேகர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. மணிஷர்மா இந்தப் படத்துக்கு இசையமைக்கிரார். இந்தப் படம் வருகிற 17 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.
3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற டிரெய்லர் வெளியிட்டு விழாவில் பேசிய சமந்தா, ''நான் வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்திருக்கிறேன். நான் சினிமாவை நேசிப்பதும், சினிமா என்னை நேசிப்பதும் தான் எந்த மாற்றமுமின்றி நிலையாக இருக்கிறது. சாகுந்தலம் படத்தின் மூலம் சினிமாவுக்கும் எனக்குமான காதல் இன்னும் வளரும் என நினைக்கிறேன்.
சகுந்தலம் படத்தைப் பார்த்தபோது எனது எதிர்பார்ப்பையும் மீறி படம் ஈர்த்தது. எனக்கு ஏற்பட்ட உணர்வுகளைப் பார்வையாளர்களும் அனுபவிப்பார்கள். என்றார். மேடையில் சமந்தா கண்ணீர்விட்டு அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
Dear @Samanthaprabhu2♥️
Many Heroines In Indian Film Industry May Come & Go, But You Are Always One For Me 🥺❤️ I Love You Forever & Ever 💕 @Samanthaprabhu2 Forever 💘 #SamanthaRuthPrabhu #Samantha #Shakunthalam #Samanthaforever pic.twitter.com/S88uy6WkNW
— Filmify Official (@filmify_) January 9, 2023
..
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.