ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தனது கணவருடன் சாய் பல்லவி நடித்த லவ் ஸ்டோரி... கரெக்‌ஷன் செய்ய சொன்னாரா சமந்தா?

தனது கணவருடன் சாய் பல்லவி நடித்த லவ் ஸ்டோரி... கரெக்‌ஷன் செய்ய சொன்னாரா சமந்தா?

சாய் பல்லவி | சமந்தா

சாய் பல்லவி | சமந்தா

ஊரடங்கு முடிவடைந்த பின்னர் மீதமுள்ள படப்பிடிப்பை நடத்தி முடித்து இந்த ஆண்டு, ‘லவ் ஸ்டோரி’ திரைப்படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ‘லவ் ஸ்டோரி’ திரைப்படத்தின் எடிட் செய்யப்படாத வெர்ஷனைப் பார்த்து அதில் சமந்தா சில திருத்தங்களை செய்யச் சொன்னதாக தகவல் வெளியானது.

  சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யா - சாய் பல்லவி நடித்து வரும் படம் லவ் ஸ்டோரி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்தப் படத்தில் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்க்க இயக்குநரிடம் சமந்தா விருப்பம் தெரிவித்ததாகவும், இதையடுத்து எடிட் செய்யப்படாத வெர்ஷனைப் பார்த்து அதில் நாக சைதன்யாவை விட சாய் பல்லவிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்ததாலும், அவர் நாகசைதன்யாவை ஓவர் டேக் செய்யும் அளவுக்கு நடித்திருப்பதாகவும் அதனால் படத்தின் சில பகுதிகளை திருத்தம் செய்யச் சொன்னதாகவும் தகவல் வெளியானது.

  இந்நிலையில் இதுகுறித்து படக்குழுவினர் விளக்கமளித்துள்ளனர். அதில், “சாய் பல்லவி குறித்து சமந்தா கூறியதாக வெளிவரும் தகவலில் உண்மையில்லை. படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், ஊரடங்கு காலகட்டத்தில் சமந்தா எப்படி வெளியே வந்து படத்தைப் பார்த்திருக்க முடியும். நாக சைதன்யா ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் இயக்குநரிடம் அந்தக் கதையில் திருத்தம் செய்யச் சொல்ல மாட்டார். இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதன்படியே நடப்பவர்.” என்று கூறப்பட்டுள்ளது.

  ஊரடங்கு முடிவடைந்த பின்னர் மீதமுள்ள படப்பிடிப்பை நடத்தி முடித்து இந்த ஆண்டு, ‘லவ் ஸ்டோரி’ திரைப்படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Actress sai pallavi, Actress Samantha