Home /News /entertainment /

தேர்தலில் தனது ஆதரவை வெளிப்படையாக அறிவித்த சமந்தா!

தேர்தலில் தனது ஆதரவை வெளிப்படையாக அறிவித்த சமந்தா!

நடிகை சமந்தா

நடிகை சமந்தா

மக்களவைத் தேர்தலில் தனது ஆதரவு யாருக்கு என்பதை நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் 25 தொகுதிகள், அருணாசலப் பிரதேசம் (2), அசாம் மாநிலத்தில் 5 தொகுதிகள், பிஹாரில் 4 தொகுதிகள், சத்தீஸ்கரில் ஒரு தொகுதி, ஜம்மு-காஷ்மீரில் 2 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 7 தொகுதிகள், மணிப்பூர், மிஸோரம், திரிபுரா, நாகாலாந்து, அந்தமான் நிகோபர் தீவுகள், லட்சத்தீவு ஆகியவற்றில் தலா ஒரு தொகுதி, மேகலாயாவில் 2 தொகுதிகள், ஒடிசாவில் 4 தொகுதிகள், உத்தப்பிரதேசத்தில் 8 தொகுதிகள், உத்தரகாண்டில் 5 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகள் என 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றிலுள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கு முதல்கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

இத்தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, சிக்கிம் மாநில சட்டப்பேரவைகளுக்கும், ஒடிஸா சட்டப்பேரவியிலுள்ள சில தொகுதிகளுகும் தேர்தல் நடைபெறுகிறது.இந்நிலையில் ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ரெபல்லே சட்டமன்ற தொகுதியில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும், தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளருமான அனகனி சத்யா பிரசாத்துக்கு நடிகை சமந்தா ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வீடியோ வெளியிட்டிருக்கும் சமந்தா, “சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் அனகனி சத்யா பிரசாத் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற அனைவரும் வாக்களிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.



மேலும் இதுகுறித்த ட்விட்டர் கேள்விக்கு பதிலளித்த சமந்தா, என்னுடைய ஆதரவை அனகனி சத்யா பிரசாத்துக்கு தெரிவித்துள்ளேன். அவர் என்னுடைய குடும்ப நண்பர். நான் ஹைதராபாத்துக்கு குடியேறியது முதல் அவரையும் அவருடைய சகோதரி டாக்டர் மஞ்சுளா அனகனியையும் நன்றாகத் தெரியும். அவர் நல்ல மனிதர் என்பதால் நான் ஆதரவளித்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.



 

தவறாக நடக்க முயன்றவருக்கு ’பளார்’விட்ட குஷ்பு - வீடியோ






சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Published by:Sheik Hanifah
First published:

Tags: Actress Samantha, Elections 2019, Lok Sabha Elections 2019

அடுத்த செய்தி