Home /News /entertainment /

விஜய் சேதுபதி படத்திலிருந்து சமந்தா விலகல் - கர்ப்பம் தான் காரணமா?

விஜய் சேதுபதி படத்திலிருந்து சமந்தா விலகல் - கர்ப்பம் தான் காரணமா?

நாக சைதன்யா - சமந்தா தம்பதி

நாக சைதன்யா - சமந்தா தம்பதி

‘காத்து வாக்குல ரெண்டு காதல்'  படத்திலிருந்து நடிகை சமந்தா விலகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இத்திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை 2020-ம் ஆண்டின் காதலர் தினத்தன்று படக்குழு வெளியிட்டது.

அதைத்தொடர்ந்து படப்பிடிப்பு பணிகள் வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து துவங்க இருக்கும் நிலையில் இத்திரைப்படத்திலிருந்து நடிகை சமந்தா விலகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருக்கும் செய்தியில், நடிகை சமந்தா கர்ப்பமாக இருப்பதாகவும், குழந்தை பெறுவதைக் கருத்தில் கொண்டு அவர் இந்தப் படத்திலிருந்து விலகியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் நடிப்பதற்காக ஒப்பந்தமான படங்களிலிருந்தும் அவர் விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா மகன் நாக சைதன்யாவும், சமந்தாவும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ‘ஏ மாய சேஸாவே’ படத்தின் ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.

8 வருட காதலுக்குப் பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு தம்பதிகளான இவர்கள் திருமணத்துக்கு பின்னரும் திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். இதையடுத்து இவர்களிடம் எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப்போகிறீர்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் நல்ல செய்தி சொல்ல காத்திருக்கிறாரா சமந்தா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மேலும் படிக்க: கொரோனா பாதிப்பு எதிரொலி... ரஜினி - கமல் படப்பிடிப்புகள் ரத்து...!
Published by:Sheik Hanifah
First published:

Tags: Actress Samantha

அடுத்த செய்தி