சமந்தாவின் முதல் வெப் சீரிஸ்... வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சமந்தாவின் முதல் வெப் சீரிஸ்... வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சமந்தா

தேவதர்ஷினி, மைம் கோபி, அழகம் பெருமாள் போன்ற தமிழ் கலைஞர்களும் இந்த வலைத் தொடரில் இடம் பெற்றுள்ளனர்.

 • Share this:
  நடிகை சமந்தா நடித்துள்ள வலை தொடரின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்ட ’த ஃபேமிலி மேன்’ என்ற வெப் சீரிஸ் இந்தியாவில் மிகவும் வெற்றிகரமான, புகழ்பெற்ற வலைத் தொடர்களில் ஒன்றாகும். இப்போது, தி ஃபேமிலி மேன் இரண்டாவது சீசனும் இயக்கப்பட்டு வருகிறது.

  ஃபேமிலி மேன் சீசன் 2 தொடர் மூலம் டிஜிட்டல் தளத்தில் அறிமுகமாகிறார் நடிகை சமந்தா. இது தான் அவர் நடிக்கும் முதல் வலைத் தொடர். இந்த வெப் சீரிஸில் சமந்தா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த ஃபேமிலி மேன் 2 அமேசான் பிரைம் வீடியோவில் பிப்ரவரி 12-ஆம் தேதி வெளியாக உள்ளது.

  ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டி.கே இயக்கியுள்ள தி ஃபேமிலி மேன் சீசன் 2 வலைத் தொடரில், மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஷரிப் ஹாஷ்மி, ஷரத் கெல்கர் மற்றும் ஸ்ரேயா தன்வந்தரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சமந்தாவைத் தவிர, தேவதர்ஷினி, மைம் கோபி, அழகம் பெருமாள் போன்ற தமிழ் கலைஞர்களும் இந்த வலைத் தொடரில் இடம் பெற்றுள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: