Home /News /entertainment /

பிக்பாஸ்க்கு குட் பை சொல்கிறாரா பிரபல நடிகர்?

பிக்பாஸ்க்கு குட் பை சொல்கிறாரா பிரபல நடிகர்?

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமான ஒன்றாக வலம் வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி.

தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து மூன்று சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியுள்ளார். இதேபோல் பாலிவுட்டில் நடிகர் சல்மான் கான் இந்நிகழ்ச்சியின் 10 சீசன்களை தொகுத்து வழங்கியுள்ளார்.

அவருக்கு இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க நாள் ஒன்றுக்கு ரூ.8.5 கோடி சம்பளம் வழங்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கு முன்பு ரூ.6.5 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாகவும், தற்போது ஒரு நாள் நிகழ்ச்சிக்கு ரூ.8.5 கோடி சம்பளம் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் சல்மான் கான் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகுவது குறித்து யோசிப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று எனக்குள் தோன்றுகிறது. ஆனால் அந்நிகழ்ச்சியை தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் என் மனது சொல்கிறது.

நடிகர் சல்மான் கான்


நாடு எங்கே செல்கிறது. நம் மதிப்பீடுகளின் நிலை என்ன என்பதைப் பற்றி நான் நிறைய தெரிந்து கொள்கிறேன். பிரபலங்களின் மூலம் இதை அறிந்து கொள்கிறோம். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டுச் சென்ற பின் அவர்கள் அப்படி நடந்து கொள்வதில்லை. பிக்பாஸ் இல்லத்தின் சூழல் போட்டியாளர்களின் நடவடிக்கைகளுக்கு காரணமாக இருக்கிறது.

ஜனவரி மாதத்தில் முடிவடைய இருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 5 வாரங்கள் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை அவ்வளவு நாட்கள் தொகுத்து வழங்குவது கடினம்” என்று கூறியுள்ளார் சல்மான் கான். அவர் இல்லாத அந்த 5 வாரங்களை ஃபரா கான் தொகுத்து வழங்க உள்ளார்

.
Published by:Sheik Hanifah
First published:

Tags: Bigg Boss, Salman khan

அடுத்த செய்தி