'ஆண்டிம்' படத்தில் நடிக்கும் சல்மான் கானின் தோற்றம் குறித்த வீடியோ வெளியீடு!

'ஆண்டிம்' படத்தில் நடிக்கும் சல்மான் கானின் தோற்றம் குறித்த வீடியோ வெளியீடு!

'ஆண்டிம்' படத்தில் நடிக்கும் சல்மான் கானின் தோற்றம்

சல்மான் ஒரு தலைப்பாகை மற்றும் சாதாரண உடையை அணிந்துகொண்டு காய்கறி சந்தைக்கு வருவதைப் போல ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

  • Share this:
'பீவி ஹோ தோ ஐசி' என்ற ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமான சல்மான் கான், மிகப் பெரிய வெற்றி படத்திற்காக சில காலம் காத்திருந்தார். 'மைனே பியார் கியா' என்ற வெற்றி படத்தின் மூலம் இந்தி திரைப்படத்துறையில் களமிறங்கினார். அத்திரைப்படத்தில் அவரின் நடிப்பிற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் (Filmfare Award) அவர் வென்றார். 1988 முதல் இன்று வரை பல வெற்றித் திரைப்படங்களை அளித்து வந்த சல்மான் கானுக்கு திரை உலகை தாண்டியும் பல சர்ச்சைகளில் அவ்வப்போது அவர் சிக்குவது உண்டு.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தில் இவருக்கும் தொடர்பு உள்ளது என்று வெளியான செய்தியும் அதற்கு இவர் தரப்பு விளக்கம் என பல விஷயங்கள் இவரை சுற்றி வந்து கொண்டுதான் இருக்கின்றது. இருப்பினும் இவரது ரசிகர்கள் இவர் மீது கொண்டுள்ள வெறித்தனமான அன்பினால் திரைத்துறையில் இன்றும் மிகப்பெரிய உச்சத்தில் சல்மான் உள்ளார்.

சல்மான் கான் தற்போது 'ஆண்டிம்' (Antim) படத்தில் ஒரு சீக்கிய காவலராக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை அமைதியாக சல்மான் கான் தொடங்கினார் என்ற செய்தி வெளியான சில மணிநேரங்களுக்குள் இன்டர்நெட்டில் இதுபற்றிய பரவலான பேச்சு எழுந்தது. இந்த படத்தில் சல்மானுடன் அவரது மைத்துனர் ஆயுஷ் ஷர்மாவும் (Aayush Sharma) முக்கிய வேடத்தில் நடிக்கிறார், இந்த படத்தில் சல்மானின் தோற்றத்தைக் காண அவரது ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர்.

இதனிடையே 'ஆண்டிம்' பட தொகுப்பிலிருந்து ஆயுஷ் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த குறுகிய வீடியோ கிளிப்பில், சல்மான் ஒரு தலைப்பாகை மற்றும் சாதாரண உடையை அணிந்துகொண்டு காய்கறி சந்தைக்கு வருவதைப் போல ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

படத்தில், சல்மான் தனக்கே உரிய பாணியில் நடிக்கிறார். அவர் இந்த படத்தில் நில மாஃபியாக்களை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு போலீஸ்காரராக நடிக்கிறார். நவம்பர் 16 தீபாவளிக்குப் பிறகு புனேவில் இந்த படப்பிடிப்பு தொடங்கியதாக மும்பை மிரர் ( Mumbai Mirror) செய்தி வெளியிட்டுள்ளது .

மேலும் ஆயுஷ் மற்றும் துணை நடிகர்களுடன் மும்பையின் பிஸியான தெருக்களில் ஒரு துரத்தல் காட்சியை படமாக்கிய படக்குழு பின்னர் கர்ஜாட்டில் உள்ள என்.டி ஸ்டுடியோவிற்கும் (ND Studios in Karjat), மும்பையின் மேற்கு புறநகர்ப் பகுதியான வெர்சோவாவிற்கும் சென்றது. ஆயுஷுடனான 20 நாள் கால அட்டவணைக்குப் பிறகு, சல்மான் டிசம்பர் 6ம் தேதி படத்தின் படப்பிடிப்பில் இணைந்து கொண்டார். மகேஷ் மஞ்ச்ரேகர் (Mahesh Manjrekar) இயக்கியுள்ள இப்படத்தில் நிகிதின் தீர் (Nikitin Dheer) ஒரு கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

 

  
View this post on Instagram

 

A post shared by Aayush Sharma (@aaysharma)


 

சல்மான் கான் திரைப்படத் துறையில் மட்டுமல்லாது பல்வேறு துறைகளிலும் பரவலாக பேசப்படும் நபராக இருக்கிறார். குறிப்பாக 22 ஆண்டுகளுக்கு முன்பு மான்களை வேட்டையாடியது பற்றிய செய்தி, சமீபத்தில் கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கு பற்றிய அவரது கருத்து, பிரபலங்களுடனான முரண், ரசிகர்களை பற்றிய விமர்சனம் என அவரை சுற்றி ஏதேனும் ஒரு விமர்சனம் எப்போதும் வளம் வந்து கொண்டு தான் உள்ளது.
Published by:Sankaravadivoo G
First published: