முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / என் வீட்டின் முன் வரவேண்டாம்: ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்த சல்மான் கான்

என் வீட்டின் முன் வரவேண்டாம்: ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்த சல்மான் கான்

சல்மான் கான்

சல்மான் கான்

தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு சல்மான் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பாலிவுட் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் சல்மான் தனது பிறந்தநாளை

முன்னிட்டு ரசிகர்கள் யாரும் வீட்டிற்கு வரவேண்டாம் என

கோரிக்கை விடுத்துள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சல்மான்

கான்.இவர் இன்று தனது 55 வது பிறந்தநாளை

கொண்டாடுகிறார்.ஒவ்வொரு ஆண்டும் சல்மான் கானின்

பிறந்தநாளின் போது ரசிகர்கள் மும்பையில் இருக்கும் கேலக்ஸி

அபார்ட்மெண்ட் முன்பு கூடி கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கம்

இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் நிலையில்,ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை

விடுத்துள்ளார்.அதில்’இத்தனை நாட்களாக உங்கள் அன்பு என்னை

நெகிழ வைத்துள்ளாது.ஆனால் தற்போது கொரோனா பரவல்

காரணமாக யாரும் என் வீட்டிற்கு முன்பு கூட வேண்டாம்.தற்போது

நான் கேலக்ஸி அபார்ட்மெண்ட்டில் இல்லை என்று

தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பிறந்தநாளை கொண்டாட நேற்றிரவே சல்மான் கான் தனது பண்ணை வீட்டிற்கு சென்றுவிட்டார் .சல்மான் கான் வீட்டில் இல்லை என்பது தெரிந்ததும் அவரின் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மேலும் ஹிந்தியில் ஒளிப்பரப்பாகி வரு பிக்பாஸ் சீசன் 14 நிகழ்ச்சியை சல்மான் தொகுத்து வழங்கி வருகிறார்.இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தவறு செய்தால் பளீச் என்று சுட்டிக்காட்டி விடுவார்.இவரின் இந்த செயல் பிக்பாஸ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bollywood, Happy BirthDay, Salman khan