சிறை தண்டனை குறித்து வருந்தவில்லை - சல்மான் கான்

news18
Updated: May 16, 2018, 3:46 PM IST
சிறை தண்டனை குறித்து வருந்தவில்லை - சல்மான் கான்
சல்மான் கான் - நடிகர்
news18
Updated: May 16, 2018, 3:46 PM IST
சிறைத் தண்டனை குறித்து வருத்தப்படவில்லை என நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

சல்மான் கான் நடிப்பில் உருவாகிவரும் 'ரேஸ் 3' படத்தின் வெளியீட்டை பாலிவுட் திரையுலகமே எதிர்பார்த்திருக்கும் நிலையில் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய சல்மான் கான், “ரேஸ் 3 படத்தின் கதையை ரமேஷ் தௌரனி இரு வருடங்களுக்கு முன் என்னிடம் கூறியிருந்தார். அப்போது நான் இந்தக் கதைக்குப் பொருந்த மாட்டேன் என ரமேஷ் தௌரனியிடம் கூறினேன். சில மாற்றங்களைச் செய்யுங்கள் என வலியுறுத்தினேன். மாற்றங்கள் செய்த பின் சுவாரஸ்யம் நிறைந்த திரைக்கதையாக உருவாகியுள்ளதை உணர்ந்தேன்” எனக் கூறினார்.

இதையடுத்து சிறைத் தண்டனை விதிக்கப்பட்டபோது படங்கள் பாதியிலேயே நிற்பதை நினைத்து கவலைப்பட்டீர்களா என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த சல்மான்கான், “நான் எப்போதும் சிறைக்குள்ளேயே இருந்து விடுவேன் என நினைத்தீர்களா?” என்று பத்திரிகையாளர்களிடம் கேள்வி எழுப்பினார். மேலும் எதிர்மறையான கேள்விகள் வர, “நன்றி. நான் சிறைத் தண்டனை குறித்து வருத்தப்படவில்லை” என்று தெரிவித்தார்.

ரெமோ டி சோஸா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ரேஸ் 3 படத்தில் அனில் கபூர், ஜாக்குலின் பெர்னாண்டஸ், சாஹிப் சலீம், டெய்சி ஷா ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படம் ஜூன் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.
First published: May 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்