என்ன மச்சான்... நான் அழகா? சாக்‌ஷி அகர்வால் வெளியிட்ட வீடியோ

என்ன மச்சான்... நான் அழகா? சாக்‌ஷி அகர்வால் வெளியிட்ட வீடியோ

நடிகை சாக்‌ஷி

சாக்‌ஷி அகர்வாலின் சமூகவலைதள பதிவு ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.

  • Share this:
காலா, விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் சாக்‌ஷி அகர்வால் பிக்பாஸ் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். அப்போது கவின் உடன் நட்பு பாராட்டிய அவர் 49 நாட்களில் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் சிண்ட்ரெல்லா, டெடி, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வரும் சாக்‌ஷி சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கிறார்.

அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது புதிய புகைப்படங்களை பதிவிடும் சாக்‌ஷியை 1 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் விஷால் நடித்த சமர் படத்தில் இடம்பெற்ற அழகோ அழகு என்ற பாடலுக்கு தான் நடித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதற்கு என்ன மச்சான் நான் அழகா என்றும் சாக்‌ஷி தலைப்பிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.இதற்கு முன்னதாக அஜீத் நடித்த ‘ஆரம்பம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஸ்டைலிஷ் தமிழச்சி’ என்ற பாடலுக்கு சேலையில் கவர்ச்சியாக தோன்றி நடனமாடும் வீடியோவை சாக்‌ஷி பதிவிட்டிருந்தார். தொடர்ச்சியான அவரது பதிவுகளுக்கு ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களும், கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.
Published by:Sheik Hanifah
First published: