• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாக்சிக்கு மலர்ந்த காதல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாக்சிக்கு மலர்ந்த காதல்!

சாக்ஷி மற்றும் ஷெரின்

சாக்ஷி மற்றும் ஷெரின்

இன்று வெளியாகியுள்ள பிக்பாஸ் புரோமோவில் சாக்‌ஷிக்கு கவின் மீது உள்ள அன்பை ஷெரினிடம் தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் பங்கேற்பாளர் சாக்சி அகர்வாலுக்கு கவினுடன் காதல் மலர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி ஜூன் 23-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, லொஸ்லியா, சாக்‌ஷிஅகர்வால், மதுமிதா, கவின், அபிராமி, சரவணன், வனிதா, விஜய்குமார், சேரன், ஷெரின், மோகன் வைத்யா, தர்ஷன், சாண்டி, முகென் ராவ் மற்றும் ரேஷ்மா ஆகிய 15 பேர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர்.

    பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் எனக்கு பிடித்தது இவங்கதான்... மனம் திறக்கும் மைனா...!

    அவர்களை தொடர்ந்து கடந்த 25-ம் தேதி 16-வது போட்டியாளராக நடிகை மீரா மிதுன் பிக் பாஸ் இல்லத்திற்குள் சென்றுள்ளார்.

    பத்து நாட்களை கடந்து ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சண்டைகள் மட்டுமின்றி காதல் காட்சிகளும் அரங்கேறி வருகின்றது.

    பாபி சிம்ஹாவின் அக்காவா பிக்பாஸ் ரேஷ்மா? வைரலாகும் போட்டோ!

    அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள பிக்பாஸ் புரோமோவில் சாக்‌ஷிக்கு கவின் மீது உள்ள அன்பை ஷெரினிடம் தெரிவித்துள்ளார்.

    இந்த அன்பு பிற்காலத்தில் காதலாகக் கூட மாறலாம் என்றும் ஷெரினிடம் சாக்சி அந்த புரோமோவில் தெரிவித்துள்ளார்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: