ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ராஜமவுலி இயக்கத்தில் நடிக்கும் சாய் பல்லவி?

ராஜமவுலி இயக்கத்தில் நடிக்கும் சாய் பல்லவி?

நடிகை சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவி

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  ராஜமவுலி இயக்கத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  பாகுபலி படத்துக்கு பிறகு ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் படம் ஆர்ஆர்ஆர். அல்லுரி சிதாராமாஜு, கொமரம் பீம் என்ற இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை முன்வைத்து 1920-களில் கதை நடைபெறுகிறது.

  இந்தப் படத்தின் மூலம் மஹதீரா படத்துக்கு பிறகு ராம் சரண் - ராஜமவுலி ஆகியோர் இணைந்துள்ளனர்.அதேபோல் முதல்முறையாக ஜூனியர் என்டிஆரும், ராம் சரணும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.

  இவர்களுடன் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக் கனி, ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப் படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் துவங்கியது.

  ராம் சரண் இளவயது அல்லூரி சீதாராமராஜுவாக நடிக்க, ஜூனியர் என்.டி.ஆர் கொமரன் பீமாக நடிக்கிறார். ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக இங்கிலாந்தைச் சேர்ந்த டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் என்ற நடிகை நடித்து வந்துள்ளார். டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் கடந்த ஏப்ரல் மாதம் படத்திலிருந்து விலகிய நிலையில் அவரது கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்று படக்குழு ஆலோசித்து வருகிறது.

  பரனீதி சோப்ரா அந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது நடிகை சாய்பல்லவியிடமும் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  வீடியோ பார்க்க: யூடியூப் சென்சேஷனலாக உருவெடுத்துள்ள நடிகை சாய் பல்லவி!

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Actress sai pallavi, Rajamouli