ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிரபுதேவாவுடன் ஃபோட்டோ... சாய் பல்லவி சொன்ன அட்வைஸ்!

பிரபுதேவாவுடன் ஃபோட்டோ... சாய் பல்லவி சொன்ன அட்வைஸ்!

நடிகை சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவி டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் | Sai pallavi shares a photo taken with prabhu deva

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  நடிகை சாய் பல்லவி டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

  மலையாள படமான பிரேமம் மூலம் அறிமுகமாகி அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர் சாய் பல்லவி. மலர் என்ற கதாபாத்திரத்தில் அவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. தமிழ், தெலுங்கு என வரிசையாக படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சாய் பல்லவி. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மாரி 2. இந்தப் படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி என்ற பாடலுக்கு நடன ஆசிரியராக பணி புரிந்தவர் பிரபு தேவா. தற்போது அந்த பாடல் யூடியூப்பில் வெளியாகியுள்ளது

  இந்நிலையில் மாரி 2 படத்தின் ரவுடி பேபி பாடல் படமாக்கப்பட்ட போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, ‘நீங்கள் நினைத்த விஷயம் சரியாக போகவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். அந்த விஷயத்தை உங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செய்திருந்தால் நிச்சயம் ஒரு நாள், நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பான ஒன்றை வாழ்க்கை உங்களுக்கு பரிசாக அளிக்கும். அதற்கு உதாரணம் இந்த புகைப்படம் தான். நான் 10 வருடத்திற்கு முன்பு ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன், தற்போது அதே செட்டில் 10 வருடத்திற்கு பின் பிரபுதேவாவுடன் புகைப்படம் எடுத்துள்ளேன்’ என்று பதிவிட்டுள்ளார்

  also see:  #VIJAYSETHUPATHI25 | விஜய் சேதுபதி கடந்து வந்த பாதை...

  Published by:Prabhu Venkat
  First published:

  Tags: Actress sai pallavi, Maari 2, Prabhu deva, Rowdy Baby song