ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Sai Pallavi : தமிழில் தயாராகும் சாய் பல்லவியின் புதிய படம்..

Sai Pallavi : தமிழில் தயாராகும் சாய் பல்லவியின் புதிய படம்..

சாய் பல்லவி

சாய் பல்லவி

ட்ரீம் வாரியர் நிறுவன தயாரிப்பில் நடிகை சாய் பல்லவி நாயகி மைய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகிவுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பிரேமம் என்ற ஒரே படத்தில் தென்னிந்திய அளவில் கவனம் பெற்றவர் சாய் பல்லவி. மலையாளத்தில் ஒருசில படங்களில் நடித்தவர் தெலுங்குப் படங்களில்தான் அதிகம் கவனம் செலுத்தினார். அதற்கேற்ப அவர் நடித்த தெலுங்குப் படங்கள் வெற்றியும் பெற்றன.

அப்படியே தமிழுக்கு வந்தால் .எல்.விஜய்யின் தியா படத்தில் நடித்தார். அவரது முதல் நாயகி மையத் திரைப்படம். படம் ஓடவில்லை. மாரி 2 படத்தில் அவர் போட்ட ஆட்டம் சாய் பல்லவியை தமிழ் ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தது. கடைசியாக என்ஜிகேயில் நடித்தார். ட்ரீம் வாரியர் தயாரித்த இந்தப் படம் சுமாராகப் போனாலும் சாய் பல்லவிக்கு பெயர் கிடைத்தது.

2021 இல் சாய் பல்லவி நடிப்பில் மூன்று படங்கள் தயாராகின்றன. மூன்றுமே தெலுங்குப் படங்கள். திறமையிருப்பவர்களை அப்படியே போகட்டும் என விட முடியாதல்லவா. என்ஜிகேயை தயாரித்த ட்ரீம் வாரியரே சாய் பல்லவியை வைத்து புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது.

Photos : த்ரோபேக் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்ட நடிகை இலியானா

இதுவொரு நாயகி மையத் திரைப்படம். சின்ன பட்ஜெட் படங்கள் தயாரிக்க ட்ரீம் வாரியர் போன்று பல நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அந்த சின்ன கல்லு பெத்த லாபம் கான்செப்டில் சாய் பல்லவியை வைத்தும் ஒரு படத்தை தயாரிக்கிறார்கள். அதுதான் இது. விரைவில் படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actress sai pallavi