சாய் பல்லவியின் கதவை தட்டிய பாலிவுட் வாய்ப்பு...!

நடிகை சாய் பல்லவி

தெலுங்கின் முக்கிய இயக்குனரான விவி விநாயக் இந்தியில் ஒரு படம் இயக்குகிறார். பெல்லம்கொண்ட ஸ்ரீனிவாஸ் ஹீரோ. இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க சாய் பல்லவியை அணுகியிருக்கிறார்கள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
அறிமுகமான மலையாளத்தைவிட, பிரபலமான தமிழைவிட, தெலுங்கில் அதிக படங்கள் செய்கிறார் சாய் பல்லவி. அவர் நடித்த படங்கள் அங்கு தொடர்ச்சியாக வெற்றி பெற்றதும் ஒரு காரணம். 

2018 இல் சாய் பல்லவி 4 படங்களில் நடித்தார். தியா, மாரி 2 என இரு தமிழப் படங்கள். மற்ற இரண்டும் தெலுங்கு. 2019 ல் அதிரன் மலையாளப் படத்திலும் தமிழில் சூர்யாவின் என்ஜிகேயிலும் நடித்தார். 2020 இல் நெட்பிளிக்ஸில் வெளியான பாவகதைகள் ஆந்தாலஜியில் நடித்திருந்தார். இந்த வருடம் மூன்று படங்களில் நடிக்கிறார். மூன்றுமே தெலுங்குப் படங்கள். இந்நிலையில் இந்தியில் நடிக்கும் வாய்ப்பு சாய் பல்லவியை தேடி வந்துள்ளது

தெலுங்கின் முக்கிய இயக்குனரான விவி விநாயக் இந்தியில் ஒரு படம் இயக்குகிறார். பெல்லம்கொண்ட ஸ்ரீனிவாஸ் ஹீரோ. இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க சாய் பல்லவியை அணுகியிருக்கிறார்கள். அவர் இன்னும் தனது முடிவை அறிவிக்கவில்லை.

Also read... கேஜிஎஃப் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜுனியர் என்டிஆர்...!

பெல்லம்கொண்ட ஸ்ரீனிவாஸ் தெலுங்கின் வளர்ந்துவரும் இளம் நடிகர். தனுஷின் கர்ணன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இவர்தான் நடிக்க உள்ளார். இவரது தந்தையும், தயாரிப்பளருமான பெல்லம்கொண்ட சுரேஷ் மகனுக்காக கர்ணன் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். விரைவில் தெலுங்கு கர்ணனின் நாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அறிவிக்க உள்ளனர்உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: