கண்ணான கண்ணே சீரியலில் இணைந்த நடிகை சஹானா ஷெட்டி - புதிய ட்விஸ்ட்கள்!

நடிகை சஹானா ஷெட்டி

கொரோனா ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டதால், மீண்டும் சீரியல் படப்பிடிப்புகள் துவங்கின. பல புதிய சீரியல்களும் புதிதாக ஒளிபரப்பாக துவங்கின.

  • News18
  • Last Updated :
  • Share this:
பிரபல சின்னத்திரை நடிகை சஹானா ஷெட்டி கண்ணான கண்ணே என்ற பிரபல மெகா சீரியலில் இணைந்துள்ளார். கடந்த வருடம் கொரோனா ஊரடங்கால் பல டிவி-க்களின் சீரியல் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு சின்னத்திரையினர் கடும் பாதிப்பிற்கு உள்ளாகினர். அதற்கு பதிலாக 15, 20 வருடங்களுக்கு முன் ஒளிபரப்பான சீரியல்கள் மீண்டும் ஒளிபரப்பப்பட்டன. பின்னர் கொரோனா ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டதால், மீண்டும் சீரியல் படப்பிடிப்புகள் துவங்கின. பல புதிய சீரியல்களும் புதிதாக ஒளிபரப்பாக துவங்கின.

அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மெகா சீரியல்களில் ஒன்று கண்ணான கண்ணே. சன் டிவியில் தற்போது இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த பிரபல சீரியலில், நடிகர் பப்லு பிரித்திவிராஜ் கதாநாயகியின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கதைப்படி தனது முதல் மனைவிக்கு பிறந்த பெண்ணான மீராவை ராசி இல்லாதவள் என்று நினைத்து வெறுத்து ஒதுக்குகிறார் நடிகர் பப்லு. ஆனால் இளம்பெண் மீரா என்ற தன் தந்தையின் பாசத்திற்காக தொடர்ந்து ஏங்குகிறாள்.

இருப்பினும் மீராவின் மாற்றாந்தாய், மாற்றாந்தாயின் பெண் அதாவது தங்கை, பாட்டி மற்றும் கதாநாயகன் யுவா உள்ளிட்டோர் அவள் மீது பாசத்துடன் இருக்கின்றனர். மீராவோ இவர்களை அனைவரின் பாசத்தை விட தந்தை தன் மீது பாசம் காட்டவில்லையே என்று நினைத்து மனாவேதனையிலேயே இருக்கிறாள். மாற்றாந்தாய் பெண்ணை கொடுமை படுத்து பல சீரியல்களுக்கு மத்தியில் பெற்ற தந்தை தன் பெண்ணை வெறுக்கும் இந்த வித்தியாசமான கதை கோணம் ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது.

Also read... Pandian Stores: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை காதல் திருமணம்!

இந்நிலையில் கண்ணான கண்ணே சீரியலில் அபர்ணா என்ற கதாபாத்திரத்தில் நடிகை சஹானா ஷெட்டி நடிக்க துவங்கியுள்ளார். நடிகை சஹானா ஷெட்டி அபர்ணாவாக இடம்பெறும் எபிசோட்கள் மே 17 (நேற்று) முதல் ஒளிபரப்பாக துவங்கி உள்ளது. 1993ம் ஆண்டு பிறந்த நடிகை சஹானா அரூபம் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர். இவர் சலீம், உன்னால் என்னால், இவளுக இம்சை தாங்க முடியல, போங்கடா நீங்களும் உங்க ஆட்டமும் உட்ப சில படங்களில் கேரக்டர் ரோல்களிலும் நடித்துள்ளார்.

பகல்நிலவு என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான இவர் நடிகை ரேவதியுடன் இணைந்து சன் டிவி-யில் ஒளிபரப்பான அழகு சீரியலில் காவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். கண்ணான கண்ணே சீரியலின் கதைபடி, அபர்ணா (சஹானா) யுவராஜின் (ராகுல் ரவி) உறவினராக தோன்றுகிறார். யுவராஜிற்கு நடிகர் பப்லு தன் இளைய மகளை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில், அபர்ணாவின் (நடிகை சஹானா) என்ட்ரி சீரியலில் பல புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: