• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தனது காதலரை இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்திய நடிகை சஹானா ஷெட்டி - ரசிகர்கள் வாழ்த்து!

தனது காதலரை இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்திய நடிகை சஹானா ஷெட்டி - ரசிகர்கள் வாழ்த்து!

சஹானா ஷெட்டி

சஹானா ஷெட்டி

விஜய் டிவி-யில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் நிஷா என்ற வில்லத்தனமான கேரக்டரில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார்

  • Share this:
பிரபல சின்னத்திரை நடிகையான சஹானா ஷெட்டி சோஷியல் மீடியா மூலம் தனது காதலரை ரசிகர்களுக்கும், வெளியுலகிற்கும் அறிமுகப்படுத்தி உள்ளார்.

சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை சஹானா ஷெட்டி. பகல்நிலவு என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை சஹானா ஷெட்டி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சன் டிவி-யில் ஒளிபரப்பான "அழகு"என்ற சீரியலில் மூத்த வெள்ளித்திரை நடிகையான ரேவதி மற்றும் மூத்த நடிகரான தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்த ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றார்.

அழகு சீரியலில் தலைவாசல் விஜய் - ரேவதி தம்பதியரின் மகளாக காவ்யா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானார் நடிகை சஹானா ஷெட்டி. 1993ம் ஆண்டு ஜூலை 27-ல் பிறந்த இவர் வெள்ளித்திரையில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ALSO READ |  தான் இறந்து விட்டதாக புரளி கிளப்பிய மர்ம நபருக்கு நன்றி தெரிவித்த பிரபல நடிகை ஷகீலா!

அரூபம் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான சஹானா, சலீம், கொக்கிரகுளம், உன்னால் என்னால், இவளுக இம்சை தாங்க முடியல, சயணம், போங்கடா நீங்களும் உங்க ஆட்டமும், சமுத்திரகனியின் காயிதம், பாலாவின் தார தப்பட்டை உட்பட20-க்கும் மேற்பட்ட படங்களில் கேரக்டர் ரோல்களிலும் நடித்துள்ளார்.

 



 




View this post on Instagram





 

A post shared by Sahana (@actresssahanaa)






இதில் தார தப்பட்டை படத்தில் வரலட்சுமி சரத்குமாருடன் இணைந்து டானஸராக நடித்து கவனம் பெற்றார் சஹானா ஷெட்டி. திரைப்படங்கள், சீரியல் மட்டுமின்றி ஏராளமான டெலிஃபிலிம்களிலும் நடித்துள்ளார். தொடர்ந்து விஜய் டிவியின் பகல்நிலவு சீரியலில் தமிழ் என்ற கதாபாத்திரத்தில் எதிர்மறை ரோலில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினர்.

 



 




View this post on Instagram





 

A post shared by Sahana (@actresssahanaa)






 

அதே போல விஜய் டிவி-யில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் நிஷா என்ற வில்லத்தனமான கேரக்டரில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார். இதனிடையே தற்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலில் அபர்ணா கேரக்டரிலும், பிற்பகல் 2.30-க்கு ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு சீரியலில் முத்தையா மற்றும் சிவகாமியின் மகளாகவும், நாயகன் விஜயின் சகோதரியாக தேவி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

ALSO READ |  பிரபல ஓடிடியில் வெளியாகும் வஸந்தின் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்!

சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சஹானா ஷெட்டி, அவ்வப்போது ஃபோட்டோஷுட் நடத்தி அந்த ஃபோட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களின் லைக்ஸை பெறுவார். சமீபத்தில் தான் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதனிடையே சமீபத்தில் இன்ஸ்டா போஸ்ட் மூலம் தனது காதலரை அறிமுகப்படுத்தி உள்ளார் நடிகை சஹானா.

 



 




View this post on Instagram





 

A post shared by Sahana (@actresssahanaa)






 

தனது காதலருடன் தான் இருக்கும் ஃபோட்டோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ள சஹானா ஷெட்டி, "நீங்கள் எதிர்பார்த்தவர் !!! என் !!! "என்று கேப்ஷனிட்டு காதலர் அபிஷேக்கை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்.இதனை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் நடிகை சஹானா ஷெட்டி விழி தனது காதலர் அபிஷேக்கை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வாழ்த்தி உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: