கோவிட்-19: தாய் எழுதிய பாடலை பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடிகை சஹானா ஷெட்டி - ரசிகர்கள் பாராட்டு!

நடிகை சஹானா ஷெட்டி

தொற்று நோய்களின் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சஹானா விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடி உள்ளார்.

  • Share this:
கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் தளர்வில்லா ஊரடங்கு வரும் 7-ம்- தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தளர்வில்லா லாக்டவுன் காரணமாக ஒரு சில மாவட்டங்கள் தவிர தலைநகர் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனா பரவல் குறிப்பிடத்தகுந்த அளவு குறைந்து கொண்டே வருகிறது. இதனிடையே சின்னத்திரை பிரபலமான நடிகை சஹானா ஷெட்டி, தொற்று நோய்களின் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சஹானா விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடி உள்ளார். இந்த பாடல் நெட்டிசன்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

1993ம் ஆண்டு பிறந்த நடிகை சஹானா ஷெட்டி அரூபம் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இவர் சலீம், உன்னால் என்னால், இவளுக இம்சை தாங்க முடியல, போங்கடா நீங்களும் உங்க ஆட்டமும் உட்ப சில படங்களில் கேரக்டர் ரோல்களிலும் நடித்துள்ளார். பகல்நிலவு என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான இவர் நடிகை ரேவதியுடன் இணைந்து சன் டிவி-யில் ஒளிபரப்பான அழகு சீரியலில் காவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலில் இணைந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நடிகை சஹானா ஷெட்டி சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பவர் மற்றும் சமூகம் தொடர்புடைய தலைப்புகளில் போஸ்ட்களை அவ்வப்போது ஷேர் செய்வார். இந்நிலையில் கொரோனா பரவல் நீடித்து வரும் நிலையில் தொற்று நோய்களின் போது பராமரிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை பரப்புவதன் மூலம் நடிகை சஹானா சமீபத்தில் ரசிகர்களை கவர்ந்தார். தொற்று குறித்த விழிப்புணர்வை பரப்ப ஒரு சுவாரஸ்யமான வழியை தேர்வு செய்தார் நடிகை சஹானா ஷெட்டி. தொற்று விழிப்புணர்வு தொடர்பாக தன் தாய் பாரதி எழுதிய பாடலை பாடி அதை இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்துள்ளார் சஹானா ஷெட்டி.

Also read... சிறுமியின் முடிவால் நெகிழ்ந்த மெகாஸ்டார் சிரஞ்சீவி - ட்விட்டரில் நன்றி தெரிவித்து வீடியோ!

1978ம் ஆண்டு சி. ருத்ரைய்யா இயக்கத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா மற்றும் சிவச்சந்திரன் ஆகியோர் நடித்திருந்த அவள் அப்படித்தான் திரைப்படத்தில் இடம்பெற்ற ரசிகர்களை கவர்ந்த பாடலான "உறவுகள் தொடர்கதை.."என்ற பாடலின் ராகத்தில் "வெளியிலே போகாதீங்க, வலியில சாகாதீங்க, திட்டினா நீங்க சீராதிங்க.." என்ற சொற்களோடு நடிகை சஹானா ஷெட்டி பாடும் பாடல் துவங்குகிறது. பாடல் வரிகளை இயற்றியுள்ள நடிகையின் அம்மா பாரதி, தில்ருபா மற்றும் சித்தார் உள்ளிட்ட இசைக்கருவியை வாசிப்பதில் நிபுணர் மேலும் பயிற்சி பெற்ற இசைக்கலைஞர் ஆவார். 
View this post on Instagram

 

A post shared by Sahana (@actresssahanaa)


இந்த பாடலை "இனியாவது மாறுவோமே" ஃபுல் வீடியோ பாருங்க புரியும் என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளத்தில் ஷேர் செய்துள்ளார் சஹானா ஷெட்டி. இந்த வீடியோவில், அரசாங்க அதிகாரிகள் செயல்படுத்தி வரும் கோவிட் -19 தொடர்பான நெறிமுறைகளை அனைவரும் பின்பற்றுமாறு சஹானா கேட்டு கொண்டுள்ளார். இவரது முயற்சியை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: