காவி நிறத்தில் கவர்ச்சி உடை அணிந்து நடித்த நடிகை தீபிகா படுகோனுக்கு மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடிக்கும் 'பதான்' படத்தின் முதல் சிங்கிளான 'பேஷ்ரம் ரங்' பாடல் இரு தினங்களுக்கு முன்பு யூடியூபில் வெளியானது. நீச்சல் உடையில் தீபிகா படுகோனேவின் கவர்ச்சி ஆட்டம் பாடலுக்கு வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இரண்டு நாட்களில் 34 மில்லியன் பார்வைகளை இப்பாடல் கடந்துள்ளது.
பாடலில் தீபிகா படுகோனே அணிந்துள்ள நீச்சல் உடையின் நிறமும், பாடலுக்கு அவர்கள் வைத்துள்ள 'பேஷ்ரம் ரங்' என்ற வார்த்தைகளும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 'பேஷ்ரம் ரங்' என்றால் 'வெட்கமற்ற நிறம்' என்று அர்த்தம். பாடலின் முடிவில் காவி நிற நீச்சல் உடை ஒன்றை அணிந்து வருகிறார் தீபிகா. அந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து சமூக வலைத்தளங்களில் இந்து அமைப்பினர் கடும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: புஷ்பாவும், காந்தாராவும் பாலிவுட்டின் அழிவுக்கு காரணமா? பதிலடி கொடுத்த இயக்குநர்
இந்த நிலையில் இந்த பாடலின் காட்சியில் காவி நிறத்திலான கவர்ச்சி உடையில் தீபிகா படுகோன் காட்சிகளை நீக்கவில்லை என்றால் படத்தை திரையிட அனுமதி மறுக்கப்படும் என மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தீபிகாவின் ஆபாசமான நடன அசைவுகளும், அவர் மீது ஷாரூக்கை வைத்திருப்பதும் மிகவும் மோசமாக உள்ளது. வேண்டுமென்றே இந்துக்கள் மனம் புண்படும்படி இப்படி செய்திருக்கிறார்கள் என்று பலரும் ஆவேசத்துடன் 'பாய்காட் பதான், பேன் பதான்' என பதிவிட்டு ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Deepika Padukone