சாமி ஸ்கொயர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

news18
Updated: September 14, 2018, 8:52 PM IST
சாமி ஸ்கொயர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சாமி ஸ்கொயர் பட போஸ்டர்
news18
Updated: September 14, 2018, 8:52 PM IST
சாமி ஸ்கொயர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான சாமி படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது மீண்டும் உருவாகியுள்ளது. `சாமி ஸ்கொயர்' எனும் தலைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் விக்ரமுடன் கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா, பிரபு, ஜான் விஜய், ஓ.ஏ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கும் படத்தின் பாடல்கள் மற்றும் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்தது.

இந்நிலையில் இந்தப் படம் செப்டம்பர் 21-ம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
Loading...
 சாமி படத்தின் வெற்றியை சாமி ஸ்கொயர் முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
First published: September 14, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்