எஸ்.பி.பிக்கு கொடுக்கப்பட்ட டிரக்யாஸ்டமி சிகிச்சையை வெளியே சொல்லாதது ஏன்? - எஸ்.பி.பி.சரண் விளக்கம்

எஸ்.பி.பிக்கு கொடுக்கப்பட்ட டிரக்யாஸ்டமி சிகிச்சையை வெளியே சொல்லாதது ஏன்? - எஸ்.பி.பி.சரண் விளக்கம்

பாடகர் எஸ்.பி.பி

எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது தொடர்பாக அவருடைய மகன் சரண், மருத்துவமனை நிர்வாகத்தினர் ஆகியோர் விளக்கமளித்துள்ளார்கள்.

  • Share this:
லேசான கொரோனா அறிகுறிகளுடன் ஆகஸ்ட் 5-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பி. வெள்ளிக்கிழமை (ஆக.26) உயிரிழந்தார்.

அவரது உடல் தாமரைப்பாக்கத்தில் இருக்கும் பண்ணை வீட்டில் காவல்துறை மரியாதையுடன் சனிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் எஸ்.பி.பிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் மருத்துவக்கட்டணம் குறித்து வெளியான வதந்திக்கு அவரது மகன், தனியார் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அப்போது எஸ்.பி.பிக்கு டிரக்யாஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டதை வெளியே சொல்லாததற்கான காரணம் குறித்து எஸ்.பி.பி.சரண் விளக்கமளித்தார்.

தொடர் செயற்கை சுவாசம் கொடுக்க முடியாததால் டிரக்யாஸ்டமி செய்யப்பட்டதாகவும் சிகிச்சை செய்யும் முன் எஸ்.பி.பி.சரணிடம் அனுமதி பெற்றோம் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.மேலும் டிரக்யாஸ்டமி சிகிச்சை தொண்டை பகுதியில் செய்யும் சிகிச்சை. இதனால் எஸ்.பி.பியால் தற்காலிகமாக பேசமுடியாமல் போகலாம். அதனால் வெளியே சொல்ல வேண்டாம் என்று அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

இந்த சிகிச்சை செய்யப்பட்டதாக சொன்னால் இனி அவரால் பாட முடியாதா என்று மக்களிடம் அச்சம் வரும் அதனால் வெளியே சொல்லவில்லை என்று எஸ்.பி.பி.சரண் தெரிவித்தார்.
Published by:Sheik Hanifah
First published: