• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சொத்து சேர்ப்பதை விட தண்ணீரை சேமித்து கொடுக்க வேண்டும் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்

சொத்து சேர்ப்பதை விட தண்ணீரை சேமித்து கொடுக்க வேண்டும் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்

எஸ்.பி.பாலசுப்ரமணியம்

எஸ்.பி.பாலசுப்ரமணியம்

தண்ணீரை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். சின்ன சின்ன டிப்ஸ் உள்ளது. அதை அன்றாடம் நாம் பயன்படுத்தினால் போதும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    அடுத்த தலைமுறைக்கு சொத்து சேர்ப்பதைவிட தண்ணீரை சேமித்து கொடுக்க வேண்டும் என்று பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார்.

    டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, 100 ஆகிய படங்களைத் தொடர்ந்து சான் ஆண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கூர்கா. இந்தப் படத்தில் யோகி பாபு, சார்லி, மனோபாலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஒரு நாயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

    4 மங்கீஸ் ஸ்டுடியோ தயாரித்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் சித்தார்த், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கரு.பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு படக்குழுவை வாழ்த்தினர்.



    நிகழ்வின் போது பேசிய பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், “தண்ணீர் பற்றாக்குறை தற்போது அதிக அளவில் உள்ளது. அதற்கு காரணம் நாம் தான். இப்பொழுதாவது தண்ணீர் சேகரிப்பது சம்பந்தமாக நல்ல விஷயங்களை நாம் செய்ய முயற்சி செய்ய வேண்டும். தண்ணீரை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். சின்ன சின்ன டிப்ஸ் உள்ளது. அதை அன்றாடம் நாம் பயன்படுத்தினால் போதும். நம் தட்டில் சாப்பிடுவதை விட வாழை இலையில் சாப்பிடலாம். அதனால் தண்ணீர் மிச்சமாக வாய்ப்புள்ளது.

    தினந்தோறும் வெவ்வேறு ஆடைகளை பயன்படுத்தாமல் வாரத்திற்கு இரண்டு ஆடைகளை மட்டும் மாற்றி மாற்றி பயன்படுத்தினால் சலவைக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் மிச்சமாகும். நாம் அடுத்த தலைமுறைக்கு தண்ணீரை சேமித்து கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அடுத்த தலைமுறையினருக்கு பணம், சொத்து கொடுக்கலாம். ஆனால் அதை விட முக்கியம் தண்ணீர். அதனால் அவர்களுக்கு தண்ணீர் சேமித்து கொடுக்க வேண்டும்.

    கோல்டு, பிளாட்டினம் இவைகளை விட தண்ணீர் மிகவும் விலை உயர்ந்தது. நான் குளிப்பதற்கு ஒரு அறை பக்கெட் தண்ணீருக்காக அரை மணி நேரமாக வீட்டில் காத்துகொண்டு இருந்தேன்” என்று கூறினார்.

    வீடியோ பார்க்க: வெள்ளித்திரையில் மிளிரும் யுடியூப் நட்சத்திரங்கள்!!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: